சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் சாம் ஆல்ட்மேனை வைத்து 'நம்ம யாத்ரி' விளம்பர நோட்டிஃபிகேஷன்
கடந்த ஒரு வாரத்திற்குள் பல்வேறு மாற்றங்களைக் கண்டுவிட்டது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப நிறுவனமான ஓபன்ஏஐ. கடந்த வாரம் இதேநாளில் ஓபன்ஏஐ நிறுவனத்தின் சிஇஓ பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார் சாம் ஆல்ட்மேன். அவருக்குப் பதிலாக இடைக்கால சிஇஓவாக ஒருவரை நியமித்திருந்தது ஓபன்ஏஐ நிறுவனத்தின இயக்குநர் குழு. ஆனால், அந்த சம்பவத்திலிருந்து வெறும் ஒரு வாரமே ஆகியிருக்கும் நிலையில், சாம் ஆல்ட்மேன் அதற்குள் மைக்ரோசாஃப்டில் இணைந்து பின்னர் மீண்டும் ஓபன்ஏஐ நிறுவனத்தின் சிஇஓவாக சில நாட்களுக்கு முன்பு பதிவியில் அமர்த்தப்பட்டிருக்கிறார். சாம் ஆல்ட்மேன் மீண்டும் நியமிக்கப்படுவதற்கிடையில் இரண்டு பேர் அந்தப் பதவியில் புதிய இடைக்கால சிஇஓவாக நியமிக்க்பட்டு விட்டார்கள். மேலும், சாம் ஆல்ட்மேனை பதவி நீக்கம் செய்த இயக்குநர் குழு உறுப்பினர்கள் யாரும் இப்போது அந்நிறுவனத்தில் இல்லை.
ஓபன்ஏஐயின் நிலையைப் பயன்படுத்தி நம்ம யாத்ரி:
பெங்களூருவில் ஆட்டோ ரிக்ஷா சேவை வழங்கி வரும் நம்ம யாத்ரி தளமானது ஓபன்ஏஐ நிறுவனத்தின் இந்த நிலையை தங்களது வணிக நோக்கங்களுக்காகப் பயன்பசடுத்தியிருப்பது சமூக வலைத்தளங்களில் அனைவராலும் பாராட்டப்படுகிறது. தங்களுடைய செயலியில் இருந்து பயனாளர்களுக்கு அனுப்பப்படும் விளம்பர நோட்டிஃபிகேஷனை ஒன்றில், 'ஓபன்ஏஐயிக்கு சாம் ஆல்ட்மேனின் திரும்பி வந்ததைவிட வேகமாக பிக்கப்பை வழங்குகிறோம்' என்ற ரீதியில் விளம்பரப்படுத்தியிருக்கிறது. இந்தியாவின் மென்பொருள் தொழில்நுட்ப நகரமாக அறியப்படும் பெங்களூருவில் மட்டுமே நிறுவனங்கள் இப்படியெல்லாம் யோசிக்கும் எனக் கூறி, அந்தக் குறிப்பிட்ட விளம்பர நோட்டிஃபிகேஷனின் ஸ்கிரீன்ஷாட்டை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ட்ரெண்டு செய்து வருகின்றனர் பெங்களூர்வாசிகள்.