சார்ஜ் ஆகும் ஐபோன் அருகே தூங்க வேண்டாம் என எச்சரித்திருக்கும் ஆப்பிள்
செய்தி முன்னோட்டம்
சார்ஜ் ஆகிக் கொண்டிருக்கும் ஐபோன் அருகில் தூக்குவது குறித்த எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது ஆப்பிள். தங்களது ஐபோனை முறையாக சார்ஜ் செய்வது எப்படி, சார்ஜ் செய்யும் போது கவனிக்க வேண்டியது விஷயங்களைக் குறிந்த இந்த அறிவிப்பில் குறிப்பிட்டிருக்கிறது ஆப்பிள்.
முறையான வழிமுறைகளைப் பின்பற்றாத பட்சத்தில், விபத்து ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் அந்நிறுவனம் எச்சரித்திருக்கிறது.
ஐபோன்களை சார்ஜ் செய்யும் போது, காற்றோட்டம் நிறைந்த அல்லது சற்று திறந்த வெளியாக இருக்கும் பகுதியிலேயே வைத்திருக்க அறிவுறுத்தியிருக்கிறது ஆப்பிள். இதன் மூலம், சார்ஜிங்கின் போது ஐபோன் சூடாவது தவிர்க்கப்பட்டு, விபத்திற்கான வாய்ப்புகளும் குறையும் எனத் தெரிவித்திருக்கிறது ஆப்பிள்.
ஆப்பிள்
சார்ஜிங்கின் போது ஐபோன் பயன்பாடு:
மேலும், ஐபோன் சார்ஜ் ஆகும் போது அதனை பயன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறது ஆப்பிள். சார்ஜிங்கின் போது, ஐபோனை தலையணை, போர்வை ஆகியவற்றுக்கு அடியிலோ அல்லது அருகேயோ வைக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறது.
ஆப்பிள் ஐபோன், சார்ஜர்கள் மற்றும் வயர்லெஸ் சார்ஜர்கள் பயன்பாட்டில் இருக்கும் போது, அதன் அருகே தூக்கக்கூடாது எனத் தெரிவித்திருக்கிறது ஆப்பிள்.
ஐபோனுக்கென தயாரிக்கப்பட்ட சார்ஜர்கள் மற்றும் பிர உபகரணங்களையே பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்திருக்கும் ஆப்பிள், மூன்றாம் தரப்பு உபகரணங்களை ஆப்பிள் சாதனங்களுக்குப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறது.