ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மாடலில் இவ்வளவு புதிய வசதிகளா? லீக்கான தகவல்
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் அறிமுகமாக இன்னும் நான்கு மாதங்கள் உள்ளன. இதனிடையே, ஐபோன் 15 பற்றிய சில சுவாரசியமான தகவல்கள் வெளிவந்துள்ளன. ஐபோன் 15 மாடல்கள் வரும் செப்டம்பர் மாதம் அறிமுகமாக உள்ளது. வரப்போகும் ஐபோன் 15 இல் டைட்டானியம் சேசிஸ் மற்றும் புதுமையான கேமரா மாட்யூல், ஸ்லிம்மான பெசல் வடிவமைப்புடன் வெளியாக உள்ளதாம். இது சம்பந்தமான புகைப்படத்தையும், 9To5Mac தளமானது வெளியிட்டுள்ளது. அதேப்போல் ஐபோன் 15 ப்ரோ மாடலில் இனி பிஸிக்கல் பட்டன்களை காணமுடியாது. Solid state haptic button-யை iPhone 15 Pro மாடல்களில் கொண்டு வர உள்ளது.
ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் பற்றிய முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது
அதாவது, ஐபோன் 7 மற்றும் 8 சீரிஸ் மாடல்களின் கொண்ட ஹோம் பட்டன் தான் ஹெப்டிக் பட்டன்களாக வழங்கப்படுகிறது. முக்கியமாக ஐபோன் 15 மாடலில் டைப் சி சர்ஜிங் போர்ட்டை கொண்டு வர உள்ளது. அப்படி கவனிக்கையில் ஐபோன் 15 சீரிஸில் 2 விதமான USB சார்ஜிங் போர்ட்களை நிறுவனம் கொண்டுவரவுள்ளது. அடுத்து புதுவகையான கேமரா சென்சாரை இந்த முறை கொண்டு வர உள்ளதாம். தொடர்ந்து ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் புது வகையான ரெட் நிற வேரியண்ட்டில் கொண்டு வர உள்ளனர். இன்னும் பல மாற்றங்களை விரைவில் வெளியிடப்படும் எனக்கூறப்படுகிறது.