மும்பையில் திறக்கப்பட்ட ஆப்பிள் ஸ்டோர் - பிரதமர் மோடியை சந்திக்கும் டிம் குக்!
ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டு ஸ்டோர்கள் இந்தியாவில் திறக்கப்படுகிறது. மும்பையில் இன்று ஏப் 18இல் முதல் ஸ்டோர் காலை 11 மணியளவில் பிரம்மாண்டமாக திறக்கப்பட இருக்கிறது. இரண்டாவது ஸ்டோர் டெல்லியில் ஏப்ரல் 20ஆம் தேதி திறக்கப்படுகிறது. இதையொட்டி, மும்பையில் உள்ள Apple BKC ஸ்டோரை திறக்க ஆப்பிள் நிறுவனர் டிம் குக் இந்தியா வந்துள்ளார். அவர் இந்திய பிரதமர் மோடியையும், ஐடி அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரையும் புதன் கிழமை சந்திக்க உள்ளார். இந்த விற்பனை நிலையங்களை திறப்பதன் மூலம் ஆப்பிள் பயனர்கள் நேரடியாக சர்வீஸ் மற்றும் ஐபோனை எளிதில் வாங்கிட முடியும் எனக்கூறப்படுகிறது. மேலும் ஆப்பிள் நிறுவனம் இரண்டு ஸ்டோர்கள் திறப்பது மட்டுமின்றி இந்தியாவில் அதன் உற்பத்தியை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளது.