Page Loader
ஆப்பிளின் 25 ஆண்டுகால பயணம் - இந்தியாவை புகழ்ந்த CEO டிம் குக்! 
இந்தியாவின் கலாச்சாரம் ரொம்ப பிடிச்சிருக்கு ஆப்பிள் நிறுவனர் டிம் கும் புகழாரம்

ஆப்பிளின் 25 ஆண்டுகால பயணம் - இந்தியாவை புகழ்ந்த CEO டிம் குக்! 

எழுதியவர் Siranjeevi
Apr 17, 2023
02:44 pm

செய்தி முன்னோட்டம்

ஆப்பிள் நிறுவனமானது 25 ஆண்டு காலம் இந்தியாவில் கொண்டாடப்படும் நிலையில், நாளை ஏப்ரல் 18 ஆம் தேதி மும்பையில் முதல் ஸ்டோரை பிரம்மாண்டமாக திறக்க உள்ளது. இந்த ஸ்டோருக்கு ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் பிகேசி பெயரிட்டது. மிகுந்த வரவேற்பை பெறும் இந்த ஸ்டோரின் புகைப்படங்கள் மற்றும் அப்டேட் ஆனது இணையத்தில் வெளியாகியுள்ளன. இதேப்போன்று இரண்டாவது ஸ்டோரையும் ஆப்பிள் நிறுவனமானது இந்தியாவில் டெல்லியில் ஏப்ரல் 20 ஆம் தேதி திறக்கிறது. இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் 25 ஆண்டு காலம் நிறைவு செய்துள்ளதையும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ஸ்டோர் திறப்பு மற்றும் 25 ஆண்டுகால கொண்டாட்டத்திற்கு நிறுவனர் டிம் குக் தெரிவிக்கையில், "இந்தியாவில் அழகான கலாச்சாரமும், அதிக எனர்ஜியும் உள்ளது.

ஆப்பிள் நிறுவனம்

இந்தியாவின் கலாச்சாரம் பிடிச்சிருக்கு - ஆப்பிள் நிறுவனர் டிம் குக் மகிழ்ச்சி

இந்தியாவில் எங்களது நீண்டகால வரலாற்றை கட்டமைக்க ஆவலுடன் உள்ளோம். எனவே உள்ளூர் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவு தருவது, உள்ளூர் சமூகங்களில் முதலீடு செய்வது மற்றும் ஒன்றாக பணிபுரிந்து நல்ல எதிர்காலத்தை உருவாக்க கவனம் செலுத்துவோம்" என தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் இரண்டு ஸ்டோர்கள் திறப்பது மட்டுமின்றி இந்தியாவில் அதன் உற்பத்தியை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளது. அதன்படி ஐபோன் தயாரிப்புகள் ஃபாக்ஸ்கான், பெகாட்ரான், விஸ்ட்ரான் ஆகிய மூன்று நிறுவனங்கள் ஆப்பிள் உற்பத்தி செய்து வருகின்றன.