Page Loader
அக்டோபர் 14ல் நிகழும் வளைய சூரிய கிரகணம்.. இந்தியாவிலிருந்து பார்க்க முடியுமா?
அக்டோபர் 14ல் நிகழும் வளைய சூரிய கிரகணம்

அக்டோபர் 14ல் நிகழும் வளைய சூரிய கிரகணம்.. இந்தியாவிலிருந்து பார்க்க முடியுமா?

எழுதியவர் Prasanna Venkatesh
Oct 10, 2023
01:34 pm

செய்தி முன்னோட்டம்

பூமியில் இருந்து நாம் பார்க்க முடிகிற அரிதான விண்வெளி நிகழ்வுகள் ஒன்றான சூரிய கிரகணம் வரும் அக்டோபர் 14ம் தேதி நிகழவிருக்கிறது. இந்த சூரிய கிரகணத்தை 'வளைய சூரிய கிரகணம்' என அழைக்கின்றனர். சூரியன் மற்றும் பூமிக்கு இடையே நிலவு தோன்றுவதையே சூரிய கிரகணம் என்கிறோம். அக்டோபர் 14ம் தேதி நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தின் போது, நிலவானது பூமியில் இருந்து தூரமான புள்ளியில் சூரியன் மற்றும் பூமிக்கிடையே கடக்கவிருக்கிறது. இதனால், நிலவால் சூரியனை முழுமையாக மறைக்க முடியாமல், ஒரு நெருப்பு வளையத்தை போன்ற தோற்றம் உருவாகும். இதனாலேயே இந்த சூரிய கிரகணத்தை வளைய சூரிய கிரகணம் எனக் குறிப்பிடுகிறார்கள்.

சூரிய கிரகணம்

இந்தியாவிலிருந்து பார்க்க முடியுமா? 

அமெரிக்காவின் ஓரிகான் மற்றும் டெக்சாஸ் மாகானங்களுக்கு இடையிலான குறிப்பிட்ட நகரங்களிலிருப்பவர்களால் மட்டுமே இந்த சூரிய கிரகணத்தை பார்க்க முடியும். இந்தியாவில் இருப்பவர்களால் இந்த சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சில யூடியூப் தளங்கள் மூலம் இந்த சூரிய கிரகணத்தை நேரலையில் நம்மால் பார்க்க முடியும். இந்த சூரிய கிரகணத்தின் போது பூமியின் வலிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்ய மூன்று ராக்கெட்டுகளை ஏவுகிறது நாசா. ஒவ்வொரு ராக்கெட்டிலும் நான்கு அறிவியல் உபகரணங்கள் சூரிய கிரகணத்தின் போது பூமியின் அயனிமண்டலத்தில் ஆய்வுகளை மேற்கொள்ளவிருக்கின்றன. சூரிய கிரகணத்தின் போது மின்புலம் மற்றும் காந்தப்புலத்தின் அடர்த்தி மற்றும் வெப்பம் உள்ளிட்டவற்றில் ஏற்படும் மாற்றங்களை நாசாவின் உபகரணங்கள் அளவிடவிருக்கின்றன.