Loading...
விண்வெளியில் கால்பந்து விளையாடி மகிழ்ந்த விண்வெளி வீரர்கள்: அனில் மேனன் வெளியிட்ட சுவாரஸ்ய வீடியோ
சுவாரஸ்யமான வீடியோ ஒன்றை X தளத்தில் பகிர்ந்துள்ளார் அனில் மேனன்

விண்வெளியில் கால்பந்து விளையாடி மகிழ்ந்த விண்வெளி வீரர்கள்: அனில் மேனன் வெளியிட்ட சுவாரஸ்ய வீடியோ

எழுதியவர் Venkatalakshmi V
Sep 14, 2026
06:51 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய வம்சாவளியை சேர்ந்த நாசா விண்வெளி வீரரான அனில் மேனன், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) உள்ள வீரர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை எவ்வாறு மகிழ்ச்சியாக கழிக்கிறார்கள் என்பதைக் காட்டும் சுவாரஸ்யமான வீடியோ ஒன்றை X தளத்தில் பகிர்ந்துள்ளார். பணிச்சுமை நிறைந்த வாரத்தின் இறுதியில், விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்கள் அனைவரும் ஒன்று கூடி மிதக்கும் கால்பந்து (Football) விளையாடித் தங்களை புத்துணர்ச்சியாக்கி கொள்ளும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

மிதக்கும் கால்பந்து

விண்வெளியில் மிதக்கும் கால்பந்து & வார இறுதி நாட்கள்

விண்வெளியில் புவிஈர்ப்பு விசை இல்லாததால், சாதாரணக் கால்பந்து அங்கு வேறு மாதிரியாக மிதந்து செல்கிறது. வீரர்களும் காற்றில் மிதந்தபடியே பந்தைக் கால்களால் உதைத்து விளையாடுகின்றனர்.

விண்வெளிப் பயணத்தின் போது வார இறுதி நாட்கள் மிகவும் முக்கியமானவை என்று அனில் மேனன் விளக்கியுள்ளார்.

கடினமான ஆராய்ச்சி பணிகளுக்கு இடையே கிடைக்கும் இந்த ஓய்வு நேரம், அடுத்த வாரத்திற்கான சவால்களை எதிர்கொள்ள மனதளவிலும் உடலளவிலும் வீரர்களைத் தயார்படுத்துகிறது.

ADVERTISEMENT

விவரங்கள்

நாசாவில் அனில் மேனனின் தொழில் பயணம்

இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் அனில் மேனன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டங்களில் முக்கியப் பங்காற்றி வருகிறார்.

அனில் மேனன் அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் இந்திய மற்றும் உக்ரைனிய பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார்.

அவசரசிகிச்சை மருத்துவராக தனது பணியைத் தொடங்கிய அவர், ஹைட்டி நிலநடுக்கம், நேபாள நிலநடுக்கம் உள்ளிட்ட பல இயற்கை பேரிடர்களின் போது களத்தில் இறங்கி மீட்புப் பணிகளுக்கான மருத்துவ சேவையாற்றியுள்ளார்.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் முதல் விண்வெளி மருத்துவக் குழுத் தலைவராக பணியாற்றிய அனில் மேனன், 'டிராகன்' விண்வெளி ஓடத்தில் மனிதர்களை பாதுகாப்பாக விண்வெளிக்கு அனுப்பும் திட்டங்களில் முதன்மைப் பங்காற்றினார்.

ADVERTISEMENT