ஏர்டெல் வழங்கும் அட்டகாசமான நெட்பிளிக்ஸ் பிரீமியம் ஆஃபர்!
ஏர்டெல் நிறுவனம் தற்போது நெட்பிளிக்ஸ் சந்தா உடன் இணைந்து சூப்பரான ஆஃபரை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டில் ஜியோ மற்று ஏர்டெல் நிறுவனமானது போட்டிப்போட்டுக்கொண்டு பல ஓடிடி சலுகைகளை அறிவித்து வந்தன. அதிலும், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற ஓடிடிக்கு பலவகை சந்தாக்களை பல தரப்பட்ட ரீசார்ஜ் பிளான்களில் வழங்கி வந்தன. இப்படி ஒரு நிலையில், தற்போது ஏர்டெல் நிறுவனமானது போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு பிரீமியம் சந்தாவுக்கான ஆஃபர் அறிவித்துள்ளது. அவை, மாதம் ரூ.649 மதிப்புடைய நெட்பிளிக்ஸ் பிரீமியம் திட்டம் வெறும் ரூ.150க்கு ஏர்டெல் போஸ்பெய்டு திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.
அட்டகாசமான ஏர்டெல்லின் போஸ்ட்பெய்ட் திட்டம்
அடுத்து, ஏர்டெல் ரூ 1499 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 200ஜிபி மாதாந்திர டேட்டா, அன்லிமிடேட் வாய்ஸ் கால் வழங்குகிறது. ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் இதன் மூலம் பெறமுடியும். ரூ.1199 போஸ்ட்பெய்டு திட்டத்தில், அன்லிமிடேட் வாய்ஸ் கால்கள், 150ஜிபி மாதாந்திர டேட்டா, 3 இலவச ஆட்-ஆன் சேவைகள் வழங்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி, கூடுதலாக Netflix Basic, Amazon Prime மெம்பர்ஷிப் ஆறு மாதங்களுக்கும், Disney+ Hotstar மொபைல் சந்தா 1 வருடத்திற்கும், Wynk Premium மற்றும் ஸ்மார்ட்போன் பாதுகாப்பு ஆகியவையும் வழங்குகிறது. இதன்மூலம் ரூ.300 செலுத்தி Netflix ஸ்டாண்டர்டு திட்டத்துக்கும், மாதத்திற்கு ரூ.450 செலுத்தி Netflix பிரீமியம் திட்டத்துக்கும் வாடிக்கையாளர்கள் பயன்பெற முடியுமாம்.