
சாம்சங் கேலக்ஸி F04 விற்பனைக்கு அறிமுகம்: அதன் சிறப்பம்சங்கள் உள்ளே
செய்தி முன்னோட்டம்
தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங், இந்தியாவில் தனது சாம்சங் கேலக்ஸி F04 ஐ நேற்று நள்ளிரவு முதல் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே குறிப்பிட்டது போல, ஜனவரி மாதம் முதல் வாரத்திலேயே, இந்த குறைந்த விலை சாம்சங் போன், இந்திய சந்தைக்கு விற்பனைக்கு வந்துவிட்டது.
இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் HD டிஸ்ப்ளேவுடன் வருகிறது மற்றும் ஆக்டா-கோர் MediaTek Helio P35 SoC மூலம் இயக்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் 15W பாஸ்ட் சார்ஜிங் உடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
Samsung Galaxy F04, 720x1560 பிக்சல் தீர்மானம் கொண்ட 6.5 இன்ச் HD டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
இது 4GB RAM உடன் இணைந்து ஆக்டா-கோர் MediaTek Helio P35 SoC மூலம் இயக்கப்படுகிறது.
மேலும் படிக்க
சாம்சங் கேலக்ஸி F04 விற்பனை விவரங்கள்
இது ஜனவரி 12, 2023 முதல் விற்பனைக்கு வரும்.
மேலும் இந்த சாம்சங் கேலக்ஸி F04, பட்ஜெட் விலையில், ரூ.9,499 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சுவாரஸ்யமாக, அறிமுகச் சலுகையின் ஒரு பகுதியாக வாடிக்கையாளர்கள், ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால் Rs.1,000 தள்ளுபடியையும் பெறலாம்.
மேலும், வாடிக்கையாளர்கள் இந்த கைபேசியை விற்பனையின் முதல் நாளில் வாங்கினால், கூடுதலாக Rs.1,000 தள்ளுபடியையும் பெறலாம்.
இரண்டு தள்ளுபடிகளையும் பெற்ற பிறகு, வாடிக்கையாளர்கள் Rs.7,499க்கு வாங்கலாம்.
இந்த கைபேசியில் 64ஜிபி உள்ளக சேமிப்பகத்துடன் வருகிறது.
மேலும் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 1டிபி வரை மேலும் விரிவாக்கலாம். ஆண்ட்ராய்டு 12 கொண்டு இயங்குகிறது.
வாடிக்கையாளர்கள் கைபேசியை, ஒப்பல் க்ரீன் மற்றும் ஜெட் ஊதா வண்ண விருப்பங்களில் வாங்கலாம்.