சூரியனை நோக்கி செல்லும் வழியில், பூமியையும், நிலவையும் செல்ஃபி எடுத்த ஆதித்யா-L1
ஆதித்யா-L1 விண்கலம், படம்பிடித்த பூமி மற்றும் சந்திரனின் புகைப்படங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இன்று பகிர்ந்துள்ளது. பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாக்ராஞ்சியன் புள்ளியை (L1) நோக்கி பயணம் மேற்கொள்ளும் ஆதித்யா L1 போகும் வழியில், இந்த புகைப்படத்தை எடுத்துள்ளது. இந்த புகைப்படத்தில், தன்னோடு இணைக்கப்பட்டுள்ள VELC மற்றும் SUIT ஆகிய இரண்டு உள் பேலோடுகளையையும் சேர்த்து படம் பிடித்துள்ளது ஆதித்யா. செப்டம்பர் 2 ஆம் தேதி ஏவப்பட்ட ஆதித்யா-எல்1 இதுவரை, இரண்டு புவி சுற்றுப்பாதைகள் உயர்த்தப்பட்டுள்ளது. L1 ஐ அடையும் முன் மேலும் இரண்டு முறை சுற்றுபாதை உயர்த்தப்படவுள்ளது. அதன் முழுப் பயணமும் நிறைவடைய 125 நாட்கள் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.