
உலக கல்லீரல் தினம் 2025: கல்லீரல் நோய்க்கு காரணாமாகும் தவறான உணவுப் பழக்கம்; நாம் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை
செய்தி முன்னோட்டம்
உணவே மருந்து என்ற கருப்பொருளுடன் 2025 உலக கல்லீரல் தினம் சனிக்கிழமை (ஏப்ரல் 19) அனுசரிக்கப்படும் நிலையில், இந்தியாவில் நாடு முழுவதும் கல்லீரல் நோய்கள் அதிகரித்து வருவது குறித்து முன்னணி சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள்தொகையில் கல்லீரல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
இதற்கு பெரும்பாலும் ஆரோக்கியமற்ற உணவு முறைகள், உடல் பருமன் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்து பணிபுரியும் வாழ்க்கை முறை ஆகியவை காரணமாக கூறப்படுகிறது.
இந்திய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சங்கத்தின் தலைவர் டாக்டர் சஞ்சீவ் சைகல், கல்லீரலை குணப்படுத்தும் குறிப்பிடத்தக்க திறனை வலியுறுத்தினார்.
உணவு
சரியான உணவு பழக்க வழக்கம்
மது, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் மோசமான ஊட்டச்சத்து ஆகியவற்றால் ஏற்படும் பல வருட சேதங்களை கூட சரியான நேரத்தில் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் மாற்றியமைக்க முடியும் என்று குறிப்பிட்டார்.
"புதிய பழங்கள், பச்சை காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் மெலிந்த புரதங்கள் நிறைந்த உணவு கல்லீரல் நோயைத் தடுப்பது மட்டுமல்லாமல், அதன் மீளுருவாக்கத்தையும் ஆதரிக்கிறது." என்று அவர் கூறினார்.
சங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான டாக்டர் அபிதீப் சவுத்ரி, மூன்று இந்தியர்களில் ஒருவர் இப்போது கொழுப்பு கல்லீரல் நோயின் அபாயத்தில் இருப்பதாக எச்சரித்தார்.
இது பெரும்பாலும் கடுமையான சேதம் ஏற்படும் வரை எந்த அறிகுறிகளையும் காட்டாத ஒரு அமைதியான நிலையாகும்.
முக்கியம்
கல்லீரல் நோயை தவிர்ப்பதற்கு செய்ய வேண்டியவை
வீட்டில் சமைத்த உணவை உண்ணுவதும், அதிக தண்ணீர் குடிப்பதும், மது அருந்துவதைக் குறைப்பதும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதும், இதை சரிசெய்வதற்கு முன்னியம் என அவர் வலியுறுத்தி உள்ளார்.
2025 ஆம் ஆண்டு உலக கல்லீரல் தினத்தன்று, இன்றைய சிறிய, தகவலறிந்த உணவுத் தேர்வுகள் கல்லீரல் நோயின் சுமையை வியத்தகு முறையில் குறைக்கும் மற்றும் இந்தியாவின் சுகாதார அமைப்பின் மீதான அழுத்தத்தைக் குறைக்கும் என்று மருத்துவர்கள் மீண்டும் வலியுறுத்துகின்றனர்.