சர்வதேச சாக்லேட் தினம்: ஒவ்வொரு சாக்லேட் பிரியர்களும் பார்க்க வேண்டிய இடங்கள்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, பலராலும் விரும்பக்கூடிய சாக்லேட்டிற்கான சர்வதேச தினம் இன்று. சாக்லேட்டின் வரலாறு, 4,000 ஆண்டுகள் பழமையானது. மெக்சிகோவில் முதல்முதலாக தோன்றியது எனவும் கூறுகிறார்கள் வரலாற்று அறிஞர்கள். ஓல்மெக் இனத்தவர்கள் தான் முதன் முதலில் கொக்கோ செடிகளை வளர்த்து, சாக்லேட்டாக மாற்றினார்கள். இந்த சர்வதேச சாக்லேட் தினத்தில், உலகெங்கிலும் நீங்கள் பார்க்கவேண்டிய சில சாக்லேட் சம்பந்தப்பட்ட இடங்கள் இதோ: கேட்பரி வேர்ல்ட், பர்மிங்காம், இங்கிலாந்து: UKவில், ஆகஸ்ட் 1990 இல், கேட்பரி வேர்ல்ட் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. இப்போது ஆண்டுதோறும் 600,000 பார்வையாளர்களை ஈர்க்கிறது. இங்கு நீங்கள் சாக்லேட்களின் வரலாற்றையும் உருவாக்கும் செயல்முறை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
சாக்லேட் பிரியர்கள் பார்க்க வேண்டிய இடங்கள்
Lindt Home of Chocolate, சூரிக், ஸ்விஸ்ர்லாண்ட்: 1,500 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம், கோகோ சாகுபடி, சாக்லேட்டின் வளமான வரலாறு மற்றும் சுவிட்சர்லாந்தின் செல்வாக்கு மிக்க சாக்லேட் முன்னோடிகள் பற்றிய தகவல்களை வழங்குகிறது. லிண்ட், சாக்லேட் தயாரிக்கும் வகுப்புகளையும் வழங்குகிறது. Chocoversum, ஹாம்பர்க், ஜெர்மனி: ஜெர்மனியின் சாக்லேட் தலைநகரம் என்று அழைக்கப்படும் ஹாம்பர்க், Chocoversum இன் தாயகமாகும்.1890 ஆம் ஆண்டிற்கு முந்தைய வரலாற்றைக் கொண்ட Hachez நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இங்கு கோகோ பாட் முதல் பார்களில் பயன்படுத்தப்படும் திரவ சாக்லேட் வரை அனைத்தையும் நீங்கள் பார்த்து சுவைக்கலாம். உள்ளூர் சாக்லேட் கடைகள், பாரிஸ், பிரான்ஸ்: பிரான்ஸில் உள்ள பாரிஸ், சாக்லேட் பிரியர்களின் கனவு இடமாகும்.