Page Loader
உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம்: அதன் முக்கியத்துவம், காரணங்கள் மற்றும் அறிகுறிகளை அறிந்து கொள்ளுங்கள்
உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம்

உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம்: அதன் முக்கியத்துவம், காரணங்கள் மற்றும் அறிகுறிகளை அறிந்து கொள்ளுங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
May 18, 2023
10:59 am

செய்தி முன்னோட்டம்

HIV (Human Immunodeficiency Virus) என்பது உயிருக்கு ஆபத்தான ஒரு வைரஸ் ஆகும். இது நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கிறது. அதற்கு தக்க சிகிச்சை அளிக்காமல் முற்றிவிட்டால், எய்ட்ஸ் (Acquired Immune Deficiency Syndrome) க்கு என்ற உயிருக்கு ஆபத்தான நிலைக்கு தள்ளப்படுவீர்கள். இந்த கொடிய நோயைத் தடுக்கவும், தடுப்பூசியின் அவசரத் தேவையை ஊக்குவிக்கவும், ஆண்டுதோறும், மே 18 அன்று உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நேரத்தில் எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி, இரண்டிற்குமான வித்தியாசத்தை தெரிந்து கொள்ளுங்கள். எய்ட்ஸ் என்பது, எச்ஐவியால் ஏற்படும் நோய்த்தொற்றின் மிகவும் அட்வான்ஸ்ட் கட்டமாகும். நோயெதிர்ப்பு மண்டலத்தின், தொற்றுக்கு எதிரான CD4 செல்களை (T4 செல்கள்) HIV குறி வைத்து தாக்குகிறது.

card 2

இந்த தினம் எதற்காக அனுசரிக்கப்படுகிறது?

உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினத்தின் நோக்கம், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், எய்ட்ஸ் கல்வியை மேம்படுத்துதல் மற்றும் தடுப்பூசியின் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகும். தன்னார்வலர்கள், சுகாதார வல்லுநர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இணைந்து பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பு எச்.ஐ.வி தடுப்பூசியைக் கண்டறியும் முயற்சிகளை அங்கீகரிக்கவும், இந்த நாள் பயன்படுத்தப்படுகிறது. எச்.ஐ.வி நோய்த்தொற்றின் விளைவுகள், பலருக்கும் மாதங்கள் அல்லது ஆண்டுகள் கடந்தும் கூட வெளியில் தெரிவதில்லை. சிலருக்கு காய்ச்சல், மூட்டு வலி, தொண்டை புண், குறிப்பாக இரவில் வியர்த்தல், உடலில் சிவப்பு தடிப்புகள், அசாதாரண எடை இழப்பு, சோர்வு போன்றவை தோன்ற தொடங்கும். எச்.ஐ.விக்கு தற்போது, முற்றிலும் பலனளிக்கக்கூடிய சிகிச்சை முறைகள் ஏதுமில்லை என்பதுதான் நிதர்சனம்.