முகத்தில் பூசும் டால்க் பவுடர் புற்றுநோயை உண்டாக்கக்கூடியது என எச்சரிக்கை விடுத்தது WHO
நாம் தினமும் முகத்தில் பயன்படுத்தும் டால்க் பவுடரில் இருக்கும் டால்க் என்னும் இயற்கையான கனிமம் மனிதர்களுக்கு புற்றுநோயை உருவாகக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பின் ஒரு கிளையான புற்றுநோய்க்கான சர்வதேச நிறுவனம் (IARC) எச்சரிக்கை விடுத்துள்ளது. டால்க், மனிதர்களுக்கு கருப்பை புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்பதற்கான சான்றுகளும், எலிகளில் அது புற்றுநோயை ஏற்படுத்தியது என்பதற்கான போதுமான சான்றுகளும் கிடைத்துள்ளன என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. டால்க் மனித உயிரணுக்களில் புற்றுநோயை உண்டாக்கும் அறிகுறிகளைக் காட்டுகிறது என்பதற்கான வலுவான இயந்திர ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று IARC தெரிவித்துள்ளது.
டால்க்கை பயன்படுத்தும் பெண்களுக்கு கருப்பை புற்றுநோய் வர வாய்ப்பு
சுரங்கங்கள் மூலம் தோண்டி எடுக்கப்படும் டால்க் எனும் கனிமம், முகத்தில் பூசும் பவுடர்கள், குழந்தைகளுக்கான பவுடர்கள் ஆகியவற்றில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் பேபி பவுடர் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் ஆகியவற்றில் டால்க் உள்ளது. இந்நிலையில், டால்க்கை சுரங்களில் இருந்து எடுப்பவர்கள், அதை வைத்து அதிக நேரம் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களுக்கு டால்க் காரணமாக புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிறப்புறுப்பில் டால்க்கை பயன்படுத்தும் பெண்களுக்கு கருப்பை புற்றுநோய் வர அதிக வாய்ப்புள்ளது என்பதும் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.