NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / வெப்ப அலையினால் அதிகரிக்கும் 'விழித்திரை பக்கவாதம்': அப்படியென்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    வெப்ப அலையினால் அதிகரிக்கும் 'விழித்திரை பக்கவாதம்': அப்படியென்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?
    விழித்திரை தமனி தடைபடும்போது ஏற்படும் மருத்துவநிலை தான் விழித்திரை பக்கவாதம்

    வெப்ப அலையினால் அதிகரிக்கும் 'விழித்திரை பக்கவாதம்': அப்படியென்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?

    எழுதியவர் Venkatalakshmi V
    May 30, 2024
    04:53 pm

    செய்தி முன்னோட்டம்

    தற்போது நாடு முழுவதும் அதிகரித்துள்ள கடுமையான வெப்ப அலைகள் காரணமாக பலருக்கும் இந்த ஆரோக்கிய சீர்கேடு நிலை ஏற்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    கண்ணுக்கு இரத்தத்தை வழங்கும் விழித்திரை தமனி தடைபடும்போது ஏற்படும் ஒரு மருத்துவநிலை தான் விழித்திரை பக்கவாதம் எனப்படுகிறது.

    வெயிலினால் ஏற்படும் அதீத நீரிழப்பு மற்றும் இரத்த பாகுத்தன்மை அதிகரிப்பு காரணமாக இந்த ஆபத்தான நிலை ஏற்படுகின்றன.

    இதனால் ரத்தநாளங்களில் அடைப்புகள் ஏற்படும் சாத்தியக்கூறுகள் அதிகரிக்கிறது.

    வெப்பமான மாதங்களில், மனித உடல் அதன் வெப்பநிலையை சீராக்க குறிப்பிடத்தக்க அழுத்தத்திற்கு உள்ளாகிறது. இதனால் நீரிழப்பு, இரத்தம் தடித்தல் மற்றும் அதிகரித்த இரத்த அழுத்தம் ஆகியவை ஏற்படும்.

    மேற்கூறிய அனைத்து காரணிகளும் அதிகமாகும் போது ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, பக்கவாதத்திற்கு வழிவகுக்கும்.

     பக்கவாதம்

    விழித்திரை பக்கவாதம் என்றால் என்ன?

    இரத்த நாளங்கள் உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்கின்றன.

    அவை சுருங்கும்போதும், இரத்தக் கட்டிகளால் தடைபடும்போது, ​​இரத்த விநியோகம் தடைப்பட்டு, பக்கவாதத்திற்கு வழிவகுக்கும்.

    ஹெல்த்லைன் படி, மருத்துவ ரீதியாக விழித்திரை தமனி அடைப்பு(retinal artery occlusion) எனப்படும் கண் பக்கவாதம் ஏற்பட்டால், இந்த அடைப்பு விழித்திரைக்கு இரத்தத்தை வழங்கும் தமனிகளில் ஒன்றை பாதிக்கும்.

    விழித்திரை என்பது உங்கள் கண்ணின் பின்புறத்திள் உள்ள மெல்லிய படமாகும். இது உங்கள் மூளைக்கு ஒளி சமிக்ஞைகளை அனுப்பும்.

    அதன் மூலமாகவே உங்கள் கண்கள் என்ன பார்க்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

    விழித்திரையின் இரத்த விநியோகம் தடைபடும் போது, ​​அது பார்வை இழப்பு போன்ற நிரந்தர சேதத்திற்கு வழிவகுக்கும்.

    அறிகுறிகள்

    விழித்திரை பக்கவாதத்தின் அறிகுறிகள் என்ன?

    ஹெல்த்லைன் படி, கண் பக்கவாத அறிகுறிகள் ஒரு சில மணிநேரங்களிலேயே உண்டாகலாம் அல்லது பல நாட்களாக மெதுவாக உருவாகலாம்.

    ஒரு கண்ணில் மட்டும் அறிகுறிகள் இருந்தால், அது விழித்திரை பக்கவாதமாக இருக்கலாம்.

    நீங்கள் கவனிக்க வேண்டிய மற்ற அறிகுறிகள்:

    மிதக்கும் புள்ளிகள்: ஒருவரின் பார்வையில் மிதக்கும் சிறிய சாம்பல் புள்ளிகளாக தோன்றும்.

    மங்கலான பார்வை: ஒருவரின் பார்வை படிப்படியாக ஒரு பக்கமாகவோ அல்லது மொத்தமாகவே பார்வை மோசமடையலாம்.

    பார்வை இழப்பு: பார்வை இழப்பை படிப்படியாகவோ அல்லது திடீரென தோன்றக்கூடும்.

    வலி அல்லது அழுத்தம்: விழித்திரை பக்கவாதம் பொதுவாக வலியற்றதாக இருந்தாலும், கண்களில் அழுத்தம் அல்லது லேசான வலி போன்ற உணர்வுகள் ஏற்படக்கூடும்.

    இரத்தப்போக்கு: விழித்திரை சிவப்பாகத் தோன்றலாம்.

    தடுப்புமுறை

    விழித்திரை பக்கவாதம் வராமல் தடுப்பது எப்படி?

    விழித்திரை பக்கவாதம் ஏற்படாமல் இருக்க உங்கள் கண்களை பாதுகாப்பாக வைத்திருக்க, இந்த தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றவும்.

    நீரேற்றத்துடன் இருங்கள்

    சன்கிளாஸ்களை அணியுங்கள்

    காண்டாக்ட் லென்ஸ்கள் அணிவதைத் தவிர்க்கவும்

    AC பயன்பாட்டை குறைத்து கொள்ளவும்

    நல்ல கண் சுகாதாரத்தை கடைபிடிக்கவும்

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வெப்ப அலைகள்
    உடல் ஆரோக்கியம்
    உடல் நலம்

    சமீபத்திய

    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்தியா
    பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் காரணமாக CA தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன தேர்வு
    இந்தியாவின் பதிலடியால் பலத்த சேதம்; உலக நாடுகளிடம் நிதி வேண்டி கையேந்தி நிற்கும் பாகிஸ்தான் பாகிஸ்தான்

    வெப்ப அலைகள்

    யாருக்கெல்லாம் குல்ஃபி பிடிக்கும்! டேஸ்ட் அட்லஸில் 14வது இடத்தைப் பிடித்த குல்ஃபி!  கோடை காலம்
    தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் வானிலை அறிக்கை
    வாட்டி வதைக்கும் வெயில்; அதிகபட்ச வெப்பநிலையில் இந்தியாவிலேயே 3வது இடத்தை பிடித்தது ஈரோடு வானிலை ஆய்வு மையம்
    தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை சென்னை

    உடல் ஆரோக்கியம்

    வெறுங்காலில் நடப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா? உடற்பயிற்சி
    இந்தியாவின் பிரபல தெரு உணவுகளின் பட்டியல்: மும்பை பதிப்பு!  உணவு குறிப்புகள்
    உலக மூளைக் கட்டி தினம் 2023: அறிகுறிகள் மற்றும் அதற்கான சிகிச்சைகள் உடல் நலம்
    பழங்களை உட்கொள்ளும் போது நீங்கள் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் உடல் நலம்

    உடல் நலம்

    இந்தியாவின் பிரபல தெரு உணவுகளின் பட்டியல்: தமிழ்நாடு பதிப்பு!  தமிழ்நாடு
    யோகா செய்யும் பொழுது காயங்கள் ஏற்படுகிறதா? அதை தடுக்க இதோ சில வழிகள்  யோகா
    உங்கள் எடையை சரிபார்க்க சிறந்த நேரம் மற்றும் முறை எது? உடல் எடை
    இரத்த தானம் செய்பவர்கள் தினம்: இரத்த தானம் செய்வதால் கிடைக்கும் ஆச்சரியமான நன்மைகள் ரத்ததானம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025