உலகம் முழுவதும் அனுசரிக்கப்படும் விசித்திரமான புத்தாண்டு மரபுகள் ஒரு பார்வை
செய்தி முன்னோட்டம்
கிரெகொரியின் நாட்காட்டியை பின்பற்றும் உலகம் முழுதும் வாழும் மக்கள், ஜனவரி மாதம் முதல் நாளை புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள்.
பல கலாச்சாரங்களில் பல்வேறு பண்டிகைகள் வித்தியாசமாக கொண்டாடப்படுவது போல், புத்தாண்டு கொண்டாட்டங்களும் ஒவ்வொரு கலாச்சாரத்திலும் மாறுபடுகிறது.
எதிர்வரும் புத்தாண்டு நன்மைகளையும், மகிழ்ச்சியையும் தர வேண்டி, சில மரபுகளில் பாத்திரங்கள் உடைக்கப்படுகின்றன, சிலவற்றில் சோளக்கொல்லை பொம்மை எரிக்கப்படுகிறது.
நாளை புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில், வித்தியாசமான மற்றும் அசாதாரண சில புத்தாண்டு மரபுகளை பார்க்கலாம்.
2nd card
அதிர்ஷ்டத்தின் 12 திராட்சைகள் - ஸ்பெயின்
ஸ்பெயின் நாட்டில் 12 திராட்சைகளை உட்கொள்வது புத்தாண்டு மரபாக கடைபிடிக்கப்படுகிறது. கடிகார முள் நள்ளிரவு 12 மணியை அடையும் வரையிலும் திராட்சையை உட்கொள்வார்கள்.
உங்களால் அவற்றை சரியான நேரத்தில் உண்ண முடிந்தால், வரும் ஆண்டு முழுவதும் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் என்பது பொருள். மேலும் திராட்சையின் சுவையும் வரவிருக்கும் புத்தாண்டின் தன்மையை தீர்மானிக்கும் எனவும் நம்பப்படுகிறது.
1909 ஆம் ஆண்டு முதல் இந்த மரபு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
3rd card
தட்டுகள் உடைப்பு - டென்மார்க்
டென்மார்க் நாட்டின் மரபு படி, புத்தாண்டு சிறப்பாக அமைய அண்டை வீட்டாரின் கதவுகளில், உணவு தட்டுகள் மற்றும் சமையல் பாத்திரங்கள் உடைக்கப்படுகின்றன.
வருடம் முழுவதும் பயன்படுத்தப்படாத தட்டுகள் டிசம்பர் 31ம் தேதி உடைப்பதற்கு தயாராகிவிடும். எவ்வளவு பெரிதாக தட்டுகளின் துண்டுகள் உடைகிறதோ, அவ்வளவு பெரிதாக அதிர்ஷ்டத்தை புத்தாண்டு கொண்டுவரும் என நம்பப்படுகிறது.
இத்துடன் அவர்கள், பாரம்பரிய புத்தாண்டு விருந்தில் ஈடுபடுகின்றனர். இதில் மர்சிபான் டோனட்ஸ் (கிரான்சேகேஜ்) இடம்பெறுகிறது.
4th card
சோளக்கொல்லை பொம்மை எரிப்பு- ஈக்வடார்
புத்தாண்டுக்கு முன்பு இரவில் ஈக்குவேடர் நாட்டு மக்கள் 'அனோ விஜோ' எனப்படும், சோளக்கொல்லை பொம்மை எரிப்புக்கு தயாராகின்றனர்.
இந்த பொம்மைகள் பெரும்பாலும், செய்தித்தாள்களால் செய்யப்பட்டு பழைய துணிகள் அணிந்த, அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்களின் பொம்மைகளாக இருக்கின்றன.
பொம்மைகள் எரிக்கப்படுவது இந்த ஆண்டின் துரதிர்ஷ்டங்களுக்கு விடை பெறுவதை குறிக்கிறது.
இது ஈக்வடார் மக்கள் தங்களின் கடந்தகால துயரங்களிலிருந்து தங்களைத் தாங்களே சுத்தப்படுத்தி, பிரகாசமான எதிர்காலத்திற்கு வழி வகுப்பதாக நம்புகிறார்கள்.
5th card
வண்ணமயமான உள்ளாடைகளை அணியும் மக்கள் - லத்தீன் அமெரிக்கா
லத்தீன் அமெரிக்கா நாடுகளில் கடைபிடிக்கப்படும் உள்ளாடை மரபு, பிற மரபுகளில் இருந்து தனித்துவமாகவும், வித்தியாசமாகவும் உள்ளது.
பிரேசில், மெக்சிகோ பொலிவியா ஆகிய நாடுகளில் மக்கள் அணியும் உள்ளாடைகள், வரவிருக்கும் புத்தாண்டை தீர்மானிப்பதாக நம்பப்படுகிறது.
சிவப்பு அன்பையும், மஞ்சள் செல்வத்தையும், வெள்ளை அமைதியையும் குறிக்கிறது. நள்ளிரவு 12 மணி ஆனவுடன், மக்கள் தாங்கள் விரும்புவதை புத்தாண்டில் பெற, அதைக் குறிக்கும் நிறம் கொண்ட உள்ளாடையை அணிகின்றனர்.
6th card
வெளியில் தூக்கி எறியப்படும் பழைய மரச்சாமான்கள்- இத்தாலி
தமிழ் கலாச்சாரத்தில் மார்கழி மாதத்தின் கடைசி நாளில், பழைய பொருட்களுக்கு தீயிட்டு போகி பண்டிகை கொண்டாடுவது போல, இத்தாலியிலும் குறிப்பாக நேபிள்ஸ் பகுதியில், புத்தாண்டுக்கு முன் ஜன்னல் வழியாக பழைய மரச்சாமான்களை வெளியே வீசுவர்.
இது வரவிருக்கும் புத்தாண்டை புதுமையாக தொடங்குவதை அடையாளப்படுத்துகிறது. இந்த சமயத்தில், வீதிகள் முழுவதும் பழைய மர சாமான்களால் நிரம்பி வழியும்.
தெனாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரிலும் இது கடைபிடிக்கப்படுவதால், இந்த வினோத மரபுக்கு உலக அளவில் தொடர்பு இருப்பதை உணர்த்துகிறது.
7th card
ஃபர்ஸ்ட் ஃபுட் - ஸ்காட்லாந்து
ஸ்காட்லாந்தின் பழமையான மரபுகளில் ஒன்றான 'ஃபர்ஸ்ட் ஃபுட்', 'குவால்டாக்' என்றும் அழைக்கப்படுகிறது.
புத்தாண்டு தொடங்கியவுடன், நீங்கள் பார்க்கும் முதல் நபர் உங்களுக்கு பரிசுகளை வாங்கி வர வேண்டும் என்ற மரபே குவால்டாக்.
இந்த பரிசுகளில் நாணயங்கள், நிலக்கரி, ரொட்டி, உப்பு மற்றும் விஸ்கியின் "வீ டிராம்" ஆகியவை வீட்டிற்கு சிறந்த அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் என நம்பப்படுகிறது.
பாரம்பரியமாக ஒரு உயரமான கருமையான கூந்தல் கொண்ட ஆண் பரிசுகளை வழங்கும் ஃபர்ஸ்ட் ஃபுட் நபராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.