Page Loader
விராட் கோலி பிட்னஸ் ரகசியம் - பயன்படுத்தும் உணவு முறைகள் என்னென்ன? 
விராட்கோலி உணவு பழக்க வழக்கங்கள்

விராட் கோலி பிட்னஸ் ரகசியம் - பயன்படுத்தும் உணவு முறைகள் என்னென்ன? 

எழுதியவர் Siranjeevi
May 01, 2023
12:53 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய கிரிக்கெட் அணியுன் நட்சத்திர வீரரான விராட் கோலி தினசரி உணவு முறை பழக்க வழக்கம் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம். விராட்கோலி எப்பொழுதுமே தனது உடல் நலத்திலும், உணவு முறையிலும் அதிக அக்கறை செலுத்துவார். அவர் குடிக்கும் ப்ளாக் வாட்டர் மட்டுமே கிட்டத்தட்ட லிட்டருக்கு 4,000 ரூபாய் எனக்கூறப்படுகிறது. குடிநீர் மட்டுமின்றி பிட்னஸில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அவர் உண்ணும் உணவை பற்றி பல தகவல்கள் வெளியானது. அந்த வகையில், காலையில் எழுந்தவுடன் அவித்த முட்டைகளை எடுத்துகொள்கிறார். அதிலும், கார்போஹைட்ரேட் மற்றும் பால் சார்ந்த உணவுகளை சாப்பிடவே மாட்டாராம். சாப்பாத்தியையும் தவிர்ப்பார். மேலும், வேகவைத்த சாலட்கள் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து சாப்பிடுவது பிடிக்குமாம்.

விராட்கோலி உணவு முறை

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்

மேற்கூறிய உணவுகளை சாப்பிடுவது நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் என மருத்துவர்கள் பரிந்துரையை பின்பற்றுகிறார். உணவில் குறைந்த அளவு எண்ணெய்யை சேர்த்து கொள்வது உடல்நலத்தை பாதுகாக்கும் என மருத்துவ ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறைத் துறையின் தலைவர் டாக்டர் சோனியா காந்தி விவரித்துள்ளார். அவர், கூறியதை போல விராட் கோலியும் முட்டையின் வெள்ளை கருவை சாப்பிடுகிறார். பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து பருப்புகளை சாப்பிடுவது நல்லது என காந்தி பரிந்துரைக்கிறார். சராசரியாக தனிப்பட்ட உணவில் 15 மில்லி அல்லது 25 மில்லி அளவு எண்ணெய்யை பயன்படுத்துவது நல்லது. எனவே ஆலிவ் எண்ணெய்யை சாலட்களில் தொடர்ந்து சாப்பிடுவதால் கெட்ட கொழுப்புகள் சேராமல் பார்த்துக்கொள்ள முடியும், இதனால் தான் விராட் கோலி அதனை விரும்பி சாப்பிடுகிறார் எனக்கூறியுள்ளனர்.