உப்பில் எத்தனை வகை இருக்கிறது தெரியுமா? அவற்றின் பயன்பாடு இதுதான்
உணவைப் பொறுத்தவரை, சுவைகளின் சரியான சமநிலை நீங்கள் பயன்படுத்தும் சுவையூட்டிகளில் இருந்து வருகிறது. குறிப்பாக, உணவின் சுவையை அதிகரிப்பதிலும், ஆரோக்கியமாக வைப்பதிலும் உப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் கல் உப்பு, அயோடைஸ்ட் உப்பு தவிர உலகம் முழுவதும் பல்வேறு வகையான உப்புகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு பயன்பாடுகள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? இதோ ஒரு சில.
சோடியம் அளவை நிவர்த்தி செய்யும் கல் உப்பு
நமது சமயலறையில் கட்டாயம் இடம்பிடித்துள்ள இந்த கல் உப்பு உங்கள் உடலில் குறையும் சோடியம் அளவை நிவர்த்தி செய்யும். அதோடு தசைப்பிடிப்பை சரி செய்யும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். மேலும், இதில் ஏராளமான எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன. கூடுதலாக, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல், வீக்கம் மற்றும் வயிற்று வலி ஆகியவற்றிலிருந்தும் இந்த உப்பைக் கொண்டு நிவாரணம் பெறலாம். இந்த உப்பு சிறந்த வலி நிவாரணி. ஈறுகள், பற்களை உறுதியாக்க இதை கொண்டு தேய்க்கலாம்
இரத்தத்தில் சர்க்கரை அளவை சமன்படுத்தும் கோஷர் உப்பு
கோஷர் உப்பு, இரத்தத்தில் சர்க்கரை அளவை சமன்படுத்தி, உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது போன்ற பல ஆரோக்கிய நன்மைகளுக்காக அறியப்படுவது. பொதுவாக பல இடங்களில் கிடைக்கக்கூடிய இந்த வகை உப்பு, அயோடின் போன்ற பொதுவான சேர்க்கைகளிலிருந்து விடுபட்டுள்ளது. எனினும் இது சமையலுக்கு மிகவும் பொருத்தமான உப்பாகும். ஆனால், டேபிள் சால்ட் போல பயன்படுத்த முடியாது. நீங்கள் அதை ஒரு ஸ்க்ரப் போலவும், சிறிது தண்ணீருடன் கலந்து சுத்தம் செய்யவும் பயன்படுத்தலாம்.
சமீபகாலமாக பிரபலமாகி வரும் ஹிமாலயன் பிங்க் உப்பு
சுவடு தாதுக்கள் காரணமாக இயற்கையாகவே இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும், இந்த இமயமலை இளஞ்சிவப்பு உப்பு, பாகிஸ்தானில் உள்ள ஜீலம் மாவட்டத்தில் உள்ள கெவ்ராவிலிருந்து வருகிறது. இது ஒரு வகையான டேபிள் உப்பு தான். இதில் 96% முதல் 99% சோடியம் குளோரைடு கொண்டது. கூடவே துத்தநாகம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் குரோமியம் ஆகியவை உள்ளன. ஆனால் அவை அனைத்தும் 1% க்கும் குறைவாக உள்ளன. pH அளவுகள் மற்றும் இரத்த சர்க்கரையை சமநிலைப்படுத்த உதவுகிறது இந்த உப்பு. அதோடு வீட்டு அலங்கார பொருட்கள் மற்றும் ஸ்பா சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகிறது.
கடல் உப்பு மற்றும் சிவப்பு ஹவாய் உப்பு
கடல் உப்பு, கடல் நீர் அல்லது உப்பளங்களில் இருந்து நீரை ஆவியாக்குவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இது குறைவான பதப்படுத்தப்பட்ட மற்றும் சுவடு தாதுக்களைக் கொண்டுள்ளது. உப்பு வகைகளிலேயே அதிக ரசாயனம் கலக்காத ஆரோக்கியமான உப்பு வகை இதுதான். இது செரிமானத்தை மேம்படுத்துவதோடு, கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கும். சிவப்பு ஹவாய் உப்பு இந்த உப்பு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் திறம்பட செயல்படுவதாகவும், கவனத்தை அதிகரிக்கவும், ஆற்றல் மட்டங்களை மேம்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. அதன் சிவப்பு நிறம் இயற்கையாகவே ஹவாயில் உள்ள அலேயா ரூஜ் எனப்படும் உள்ளூர் எரிமலை களிமண்ணிலிருந்து வருகிறது. எனவே இந்த பெயர். அதன் பயன்பாட்டைப் பொறுத்த வரையில், இது சமையலுக்கும், அதன் அழகான நிறத்திற்காக உணவை அலங்கரிக்கவும் பயன்படுத்தலாம்.