இந்தோனேசியாவிற்கு சுற்றுலா செல்லும்பொழுது, நீங்கள் தவிர்க்க வேண்டிய சில தவறுகள்
செய்தி முன்னோட்டம்
இந்தோனேசியா, அழகான இயற்கை நிலப்பரப்புகள் மற்றும் சுவையான உணவுகள் கொண்ட ஒரு குட்டி நாடு. அந்த நாட்டிற்கென ஒரு தனித்துவமான கலாச்சாரமும் உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கோடை விடுமுறைக்காக, நீங்கள் அங்கே சுற்றுலா செல்வதாக இருந்தால், அந்த நாட்டில் நீங்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களும், செய்யக்கூடாத சில விஷயங்களும் உண்டு. அவற்றை பற்றி இங்கே சிறு குறிப்பு:
உங்கள் இடது கையை பயன்படுத்த கூடாது: இந்தியா கலாச்சாரத்தை போலவே, இந்தோனேசிய கலாச்சாரத்திலும், இடது கை அசுத்தமானது என்று நம்பப்படுகிறது. அது குளியலறை, கழிவறைகளுக்காக பயன்படுத்தப்படுவது. ஆகையால், இந்தோனேசியா கலாச்சாரத்தில், மரியாதை காட்ட, வாழ்த்த, சாப்பிட, பொருட்களை பரிமாற போன்ற செயல்களுக்கு, உங்கள் வலது கையைப் பயன்படுத்துவது நல்லது.
card 2
பாரம்பரிய உடைகளை அணியலாம்
உணவை வீணாக்க கூடாது: இந்தோனேசியாவில், உங்களுக்கு பரிமாறப்படும் உணவு முழுவதையும் முடிக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். இது, உணவை சமைப்பதில் செலவழித்த முயற்சி மற்றும் நேரத்திற்கான, உங்கள் மரியாதை மற்றும் பாராட்டுகளை வெளிப்படுத்தும் ஒரு வழியாகும்.
உள்ளங்கால்களைக் காட்ட வேண்டாம்: இந்தோனேசிய கலாச்சாரத்தில் உங்கள் உள்ளங்கால்களைக் காட்டுவது நாகரீகமற்றதாகவும், அவமரியாதையாகவும் பார்க்கப்படுகிறது. தற்செயலாக உங்கள் காலால் யாரையாவது தொடுவதும் கூடாது. எதிரில் இருப்பவரை நோக்கி, கால்களை நீட்டுவது தவறு.
உடலை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிய வேண்டாம்: முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடாக இந்தோனேசியா இருப்பதால், பாரம்பரிய உடைகளை அவர்கள் விரும்பி அணிகிறார்கள். அதனால், மத கோவில்கள், கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குச் செல்லும்போது, உடலை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிவதைத் தவிர்ப்பது முக்கியம்.