NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / புனித வாடிகன் நகரத்திற்கு சுற்றுலா செல்லும் போது, நீங்கள் செய்யக்கூடாதவை!
    அடுத்த செய்திக் கட்டுரை
    புனித வாடிகன் நகரத்திற்கு சுற்றுலா செல்லும் போது, நீங்கள் செய்யக்கூடாதவை!
    வாடிகன் நகரில் நீங்கள் செய்யக்கூடாதவை!

    புனித வாடிகன் நகரத்திற்கு சுற்றுலா செல்லும் போது, நீங்கள் செய்யக்கூடாதவை!

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 03, 2023
    06:27 pm

    செய்தி முன்னோட்டம்

    வாடிகன் நகரம், கலை மற்றும் கட்டிடக்கலையின் பிரமிக்க வைக்கும் சில படைப்புகளுக்கு பெயர் பெற்றது.

    அதோடு, ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் மையமாக, இது ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கிறது. கிறிஸ்தவர்களுக்கு, இது ஒரு புனித நகரமாகும்.

    இருப்பினும், சுற்றுலாப் பயணிகள், இந்த ஊரின் மகத்துவத்தை பாதிக்கும் வகையில் சில தவறுகளை அடிக்கடி செய்கிறார்கள்.

    உடலை வெளிப்படுத்தும் ஆடைகளை அணியாதீர்கள்: வாடிகன் நகரத்திற்குச் செல்லும்போது, ​​நாகரிகமான உடை அணிவது அவசியம். குட்டை பாவாடைகள், ஷார்ட்ஸ் அணிவதைத் தவிர்த்து, முக்கியமாக உங்கள் தோள் பகுதி மூடியிருக்கும் வகையில் ஆடை அணியவேண்டும்.

    கால்களில், வார் செருப்புகள் அணியலாம், ஆனால் ஃபிளிப்-ஃப்ளாப்கள் அணியக்கூடாது. அதேபோல், வாடிகன் கட்டிடங்களுக்குள் நுழையும் போது உங்கள் தொப்பியை கழற்ற மறக்காதீர்கள்.

    வாடிகன்

    வழிபாட்டு தலங்களில் அமைதி காக்க வேண்டும்

    வழிபாட்டு தலங்களில் அமைதி காக்கவும்: செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா அல்லது சிஸ்டைன் சேப்பல் போன்ற மத வழிபாட்டு இடங்களுக்கு நீங்கள் செல்லும்போது, ​​மரியாதை நிமித்தமாக, அமைதியாக இருப்பது அவசியம். அந்த வழிபாட்டு தலங்களின் நுழைவாயிலில் குறிப்பிடப்பட்டிருக்கும் விதிகளை பின்பற்றவேண்டும்.

    சுவிஸ் போலீசாருடன் புகைப்படங்கள் எடுக்கக்கூடாது: சுவிஸ் காவலர்கள், வண்ணமயமாக சீருடை அணிந்திருந்தாலும், போப் ஆண்டவரையும், வாடிகன் நகரையும் பாதுகாக்கும் முக்கிய பொறுப்பு அவர்களுக்கு உண்டு. அவர்கள் பணியினை இடையூறு செய்யும் விதமாக, அவர்களை புகைப்படம் எடுக்கக்கூடாது.

    நிர்வாண ஓவியங்கள் மற்றும் சிற்பங்களை சுட்டிக்காட்டி சிரிக்க கூடாது: வாடிகன் நகரில், கலைப்படைப்புகள் புனிதமானவை மற்றும் வாடிகன் கலாச்சாரத்திற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது. நீங்கள் ஓவியங்களை பார்த்து சிரிப்பது, அவற்றை கேலி செய்வதாக கருதப்படும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பயண குறிப்புகள்
    சுற்றுலா

    சமீபத்திய

    2005 பெங்களூரு, 2006 நாக்பூர் தாக்குதல்கள் உட்பட இந்தியாவின் 3 பெரிய தாக்குதல்களுக்குக் காரணமான லஷ்கர் பயங்கரவாதி கொலை லஷ்கர்-இ-தொய்பா
    சாப்ட்வேர் என்ஜினீயர்களின் ஊதிய ஆதிக்கம் நீடிக்காது என்று எச்சரிக்கும் ஜோஹோவின் ஸ்ரீதர் வேம்பு செயற்கை நுண்ணறிவு
    அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது: IMD  வானிலை ஆய்வு மையம்
    இயக்குனர் மணிரத்னம்- தெலுங்கு நடிகர் நவீன் பாலிஷெட்டி காதல் கதைக்காக இணைகிறார்களா?  இயக்குனர் மணிரத்னம்

    பயண குறிப்புகள்

    எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட 86 வயது தம்பதி - நீண்ட நாள் கனவு நிறைவேறியது பயணம்
    விமான பயணத்திற்கு முன்னர், நீங்கள் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் ஆரோக்கியம்

    சுற்றுலா

    கொல்கத்தாவில் சுற்றுலாவாசிகளை கவரும் டாப் 5 ஜமீன்தார் மாளிகைகள் கொல்கத்தா
    ஸ்பெயினிற்கு சுற்றுலா செல்லவிருக்கிறீர்களா? மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்! உலகம்
    5 லட்சம் பேருக்கு இலவச விமான டிக்கெட் வழங்கும் ஹாங்காங் உலகம்
    வரலாறும், கலாச்சாரமும் கைகோர்க்கும் அழகிய யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க வேண்டிய இடங்கள் இலங்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025