செயற்கை இனிப்புகளின் பயன்பாடு மற்றும் அதன் பக்க விளைவுகள்!
இனிப்பு உணவுகள் மூளையில் இருக்கும் மகிழ்ச்சிக்கான மையங்களை செயல்படுத்துகிறது மற்றும் டோபமைனை அதிகரிக்க வழிவகுக்கிறது. இது உடல் நலத்துக்கும் அவசியம். பழங்கள், தானியங்கள் மற்றும் பால் பொருட்களில் இயற்கையாகக் கிடைக்கும் சர்க்கரைகள் பாதுகாப்பானவை என்றாலும், மிகவும் பதப்படுத்தப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை உடல் பருமன் மற்றும் பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கிறது. நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் அல்லது உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள், குறைந்த கலோரி கொண்ட சர்க்கரை அல்லாத இனிப்புகளை சாப்பிடுவதற்கு இதுவே காரணம். செயற்கை இனிப்புகளைப் பயன்படுத்துவது உடல் எடையை குறைக்க உதவுவதற்குப் பதிலாக, அவை எடை அதிகரிப்பதில் பங்களிக்கிறது. சர்க்கரை அல்லாத இனிப்புகள் மூளையில் உள்ள நரம்பியக்கடத்தியின் அளவையும் பாதிக்கலாம், இது மனநிலையையும் நடத்தையையும் மாற்றும்.
செயற்கை சர்க்கரை சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்
செயற்கை சர்க்கரை மூளையில் செரோடோனின் அளவைக் குறைப்பதாக ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, செயற்கை இனிப்புகளை அதிகமாக பயன்படுத்துவதால் கல்லீரல் பாதிப்பு மற்றும் குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதற்கான சான்றுகள் உள்ளன. இருதய நோய் அபாயம்: சில ஆய்வுகள் செயற்கை இனிப்புகளை சாப்பிடுவது இதய நோய், பக்கவாதம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற சில இருதய பிரச்சினைகள் அதிகரிக்கும் அபாயத்துடன் இணைக்கப்படலாம் என்று பரிந்துரைத்துள்ளது. செரிமான பிரச்சனைகள்: செயற்கை இனிப்புகள் செரிமான அமைப்பை பாதிக்கலாம். இதனால் அழற்சி, வாயு மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். மனச்சோர்வு: சில ஆய்வுகள், செயற்கை இனிப்புகளின் நுகர்வுக்கும் மனச்சோர்வின் அதிகரித்த அபாயத்திற்கும் இடையே ஒரு தொடர்பைக் காட்டுகின்றன.
இந்த காலவரிசையைப் பகிரவும்