ஆசிரியர்கள் தினம்: உங்கள் ஆசானுக்கு நீங்கள் தரக்கூடிய பரிசுகள்
ஆசிரியர்கள் நம் வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள். அவர்கள், ஒவ்வொரு நாளும், மாணவர்களை வாழ்க்கையில் சிறந்தவர்களாக மாற்ற உதவுபவர்கள். ஆசிரியர்கள் என்பவர்கள் உங்கள் பள்ளியில் தொடங்கி, கல்லூரிகள் வரை தொடர்ந்து, நீங்கள் பணிபுரியும் இடம், உங்கள் தொழிலில் மேம்பட உதவுபவர்கள் அனைவருமே நம் வாழ்க்கையின் ஆசான்கள் தான். உங்கள் திறமையை சரியாக இனம் கண்டு சொல்லவும், அதை மேம்படுத்த தேவையான அறிவுரைகளை வழங்கவும், உங்கள் வாழ்க்கையை சரியான நேர் பாதையில் கொண்டு செல்லவும், ஒரு அகல்விளக்கு போல உங்களை வழிகாட்டவும் இருப்பவர்கள் ஆசிரியர்கள். இந்த ஆசிரியர்கள் தினத்தன்று, அவர்களுக்கு பரிசளிக்க உங்களுக்கு ஒரு கையேடு
பாராட்டு அட்டைகள்
உங்கள் ஆசிரியருக்கு உங்கள் நன்றியைத் தெரிவிக்கவும், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், அவர்களுக்கு அழகான பாராட்டு அட்டையை தயார் செய்து தரலாம். உங்கள் வாழ்க்கையில், உங்கள் ஆசிரியரின் பங்கிற்கு நன்றிக்கூறி ஒரு பாராட்டு கடிதத்தை எழுதி தரலாம். அது உங்கள் ஆசிரியருக்கு மனமகிழ்ச்சியை தரும். கடையில் வாங்கிய அட்டையை விட கையால் செய்யப்பட்ட அட்டையில் எழுதுவதன் மூலம் அதை இன்னும் சிறப்பானதாக்குங்கள்.
ஸ்டேஷனரிகள்
பெரும்பாலான ஆசிரியர்கள், தங்கள் கிளாஸுஸ்ரூம்-இற்கு தேவையான பொருட்களை, தங்கள் சொந்த பணத்தை செலவு செய்தே வாங்குகிறார்கள். அதனால், கிளாஸ்ரூமை அலங்கரிக்க தேவையான அலங்கார பொருட்கள், ஒயிட்போர்டுகள், புத்தகங்கள் அல்லது கல்வி விளையாட்டுகள் போன்ற பரிசுப் பொருட்களை வழங்குவது அவர்களின் தேவையை பூர்த்தி செய்வது மட்டுமின்றி, தற்போதைய மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்த உதவும். இன்-டோர் பிளாண்ட்ஸ்: டேபிள் மேல் வைக்கவும், அறைகளை அலங்கரிக்கவும் பயன்படும் சில இன்-டோர் பிளாண்ட்ஸ் பரிசளிக்கலாம். இயற்கையான செடிகளை அடிக்கடி பார்க்கையில், மனம் உற்சாகமடைவதோடு, அறைக்கும் ஒரு புத்துணர்ச்சியை தரும். ஆனால், குறைந்தபட்ச பராமரிப்பு தேவைப்படும் செடிகளை வாங்கி தருவது உசிதம் இது உங்கள் ஆசிரியர்கள், கைடு, டீம் லீடர் என எல்லாருக்கும் பொதுவான கிப்ட்டாக இருக்கும்.
தனிப்பயனாக்கப்பட்ட பேக்குகள்
பல்வேறு காகிதங்கள் மற்றும் பள்ளிப் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டிய ஆசிரியர்களுக்கு ஒரு அழகிய டோட் பேக் பரிசாக தரலாம். அதற்கு மேலும் அழகு சேர்க்க, தனிப்பயனாக்கி தரலாம். எடுத்துக்காட்டாக, பையில் அவர்களுக்குப் பிடித்த மேற்கோளை அச்சிடலாம் அல்லது அவர்கள் விரும்பும் வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கலாம். இருப்பினும், பல பொருட்களை வைக்கும் வகையில் நீங்கள் தேர்வு செய்யும் பை விசாலமானதாக இருப்பதை உறுதிசெய்யவும்.
ஸ்பான்சர் ஒர்க்ஷாப்
கல்வி நிகழ்வுகளில், ஒர்க்ஷாப் போன்றவற்றில் கலந்துகொள்வதற்கான செலவினங்களை நிதியுதவி செய்வதன் மூலம், உங்களுக்குப் பிடித்த ஆசிரியரின் ஆர்வத்தைத் தொடர உதவுங்கள். அவர்களின் துறை சார்ந்த ஒர்க்ஷாப், அல்லது அவர்களுக்கு பிடித்தமான திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ள உதவும் நிகழ்ச்சிகளுக்கு அவர்களை கூட்டி செல்லலாம். உதாரணத்திற்கு, உங்கள் மெண்டாருக்கு கர்நாடக இசை பிடிக்குமென்றால், அவர்களுக்கு பிடித்த பாடகரின் கச்சேரிக்கு கூட்டி செல்லலாம். அல்லது, அவர்களுக்கு ஓவியம் பிடிக்குமென்றால், ஓவிய கண்காட்சிக்கு கூட்டி செல்லுங்கள்