டீ, காபி குடிப்பது இதய நோய் ஆபத்தை குறைக்குமா? தெரிந்து கொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
காபி மற்றும் டீ குடிப்பது உடலுக்கு பல நன்மைகள் வழங்குகிறது.
அதில் முக்கியமாக, இதய நோயின் அபாயங்களை குறைப்பதிலும் உதவுகிறது.
ஆராய்ச்சிகள் காட்டுகிறதுபோல், தினமும் மூன்று அல்லது நான்கு கப் டீ மற்றும் காபி குடிப்பதன் மூலம் பக்கவாதம் மற்றும் ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயம் குறைக்கப்படுகிறது.
காபி, டீயில் உள்ள ஆன்டி ஆக்சிடண்டுகள் உடலை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும்.
காபியில் வைட்டமின் பி 2, வைட்டமின் பி 3, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உட்பட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளன.
இது உடலின் இயற்கை ஊக்கியாக செயல்பட்டு வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும்.
அளவு
எவ்வளவு காஃபின் தினமும் எடுத்துக் கொள்ளலாம் ?
ஒருவர் தினசரி 400 மில்லி கிராம் வரை காஃபினை எடுத்துக் கொள்ளலாம்.
அதாவது 4 கப் அல்லது 5 கப் வரை டீ அல்லது காபி எடுத்துக் கொள்ளலாம்.
ஒரு கப் காபியில் 94.8 மில்லி கிராம் வரை காஃபின் இருக்கும்.
காபி மற்றும் டீ எடுத்துக் கொள்ள நினைப்போர் சிலர் லெமன் டீ, லெமன் காபி, பிளாக் காபி, பிளாக் டீ, கிரீன் டீ போன்றவற்றை எடுத்துக் கொள்வர்.
இவை ஆரோக்கியமானது தான். சிலர் டீ, காபிக்கு பால், சர்க்கரை சேர்த்து எடுத்துக் கொள்வர்.
இதனைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், பால் மற்றும் சர்க்கரையால் உடலுக்கு அதிக கலோரிகள் மற்றும் சர்க்கரை கிடைப்பது தடுக்கப்படும்.