விந்தணு குறைபாடு: அதிகமான வெப்பம் தான் காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்
உலகெங்கிலும் இனப்பெருக்க ஆரோக்கியம், குழந்தையின்மை என்று வரும் போது பெண்கள் மட்டும் தான் காரணம் என்று கூறும் நிலை மாறிவிட்டது. கணிசமான எண்ணிக்கையில், ஆண்களுக்கும் மலட்டுத்தன்மை அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஒரு தம்பதி குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்ற சூழலுக்கு ஆணின் விந்தணு குறைபாடு முக்கிய காரணமாக இருக்கிறது. மருத்துவ ரீதியாக விந்தணு குறைபாடு பிரச்னைக்கு oligospermia என்றும், விந்தணுவே இல்லை என்ற குறைபாட்டுக்கு azoospermia என்றும் கூறப்படுகிறது. விந்தணு எண்ணிக்கை குறைவு அல்லது விந்தணுக்களே இல்லாமல் போவதற்கு மது, புகைப்பிடிக்கும் பழக்கும், போதைப் பழக்கும் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. சமீபத்தில், அதிகப்படியான வெப்பமும், ஆண்கள் அதிகமான வெப்பத்துக்கு வெளிப்படும் சூழலும் விந்தணு குறைபாட்டை அதிகரித்து வருகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
கோடைகால வெப்பமும், விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கிறது
ஹார்வார்டு டிஎச் சான் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் மலட்டுத்தன்மைக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிய ஒரு ஆய்வை நடத்தியது. அதில் ஆண்கள் என்ன விதமான உள்ளாடைகளை அணிகிறார்கள் என்று கோரப்பட்டது. ஆண்கள் அணியும் உள்ளாடைகள் மற்றும் அண்டர்கார்மென்ட் என்று கூறப்படும் பேன்ட், ஷார்ட்ஸ் வகை ஆடைகள் தான் காரணமாக இருக்கின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. காற்றோட்டமாக உள்ளாடையை அணியும் ஆண்களுக்கு விந்தணு குறைபாடு ஏற்படும் சாத்தியம் குறைவு என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இறுக்கமான ஆடைகள் அதிக வெப்பத்துக்கு உள்-உறுப்புகளை வெளிப்படுத்தி, விந்தணு குறைபாட்டை தீவிரமாக்குகிறது. காற்றோட்டமான ஆடைகள் அணிவது, உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது, வாரத்துக்கு குறைந்தது 15 மணிநேரம் உடற்பயிற்சி செய்வது ஆகியவை இதற்கு தீர்வாகும்.