உலகில் ஆறில் ஒருவரை பாதிக்கும் மலட்டுத்தன்மை: உலக சுகாதார மையம் அறிக்கை
உலகில் இருக்கும் ஆறில் ஒரு மனிதன், மலட்டுத்தன்மையை அனுபவிப்பதாக, உலக சுகாதார அமைப்பு இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இதை சரி செய்வதற்கான நடவடிக்கைகளில் உடனடியாக ஈடுபட வேண்டும் என்றும் அது தெரிவித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள வயது வந்தோர்களில், சுமார் 17.5 சதவீதம் பேர், ஒரு கட்டத்தில் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், அது பிராந்தியங்கள் மற்றும் நாடுகளுக்கு இடையே சிறிய மாறுதல்கள் உண்டென்பதையும் கண்டறிந்தது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது படி, அதிக வருமானம் உள்ள நாடுகளில் 17.8 சதவீதமானவர்களும், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் 16.5 சதவீதமும் மலட்டு தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகரிக்கும் மருத்துவ செலவுகளும், பலருக்கு நிவாரணம் கிடைக்காததற்கு காரணம் அகிறது
எனினும், இன்று வெளியிடப்பட்ட உலக சுகாதார மையத்தின் அறிக்கையில், மலட்டு தன்மைக்கான சரியான காரணங்களை இன்னும் ஆராயவில்லை எனக்கூறப்பட்டுள்ளது. "மலட்டுத்தன்மை மில்லியன் கணக்கானவர்களை பாதிக்கிறது," என்று இந்த ஆய்வறிக்கையின் தலைவர் கூறுகிறார். "அதிக மருத்துவ செலவுகள், சமூக களங்கம் மற்றும் சரியான வழிகாட்டுதல் இல்லாமை ஆகியவற்றின் காரணமாக, இந்த பிரச்சனைக்கு தீர்வுகள் குறைவாகவே உள்ளது. அதிலும் ஒரு சிலருக்கு இது அணுக முடியாத பிரச்சனையாகவே பார்க்க வேண்டும்" என அவர் மேலும் தெரிவித்தார். பிரச்சினையை, "உலகளவில் இது ஒரு பெரிய சுகாதார சவால்" என்று அறைக்கூவல் விடுத்துள்ளது. மலட்டுத்தன்மை, என்பது ஆண் அல்லது பெண்ணின், இனப்பெருக்க அமைப்பில் ஏற்படும் ஒரு கோளாறாக கருதப்படுகிறது.