Page Loader
கொரோனா பரவல் அதிகம் இருக்கும் தெற்காசிய நாடுகளில் இந்தியா முதலிடம்: WHO தகவல்
உலக சுகாதார நிறுவனம்

கொரோனா பரவல் அதிகம் இருக்கும் தெற்காசிய நாடுகளில் இந்தியா முதலிடம்: WHO தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 01, 2023
12:57 pm

செய்தி முன்னோட்டம்

கொரோனா பரவல் இந்தியாவில் மீண்டும் அதிகரித்து வருவதாக அதிகார பூர்வ செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதற்காக சில மாநிலங்களில் கோவிட் தடுப்பு நடைமுறைகளும் அமலுக்கு வர துவங்கி விட்டது. இந்நிலையில், உலக சுகாதார மையம், தெற்காசிய நாடுகளிலேயே, இந்தியாவில் தான் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளது. ஒரு மாத இடைவேளையில், பிப்ரவரி 27 முதல் மார்ச் 26 காலகட்டத்தில் பெறப்பட்ட தகவலின் படி, விகிதாச்சார அடிப்படையில், தெற்காசிய நாடுகளில், இந்தியாவில் தான் கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதாகவும், அதற்கான புள்ளிவிவரத்தையும் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு

ஒரு மாதத்தில் அதிகரித்துள்ள கொரோனா பாதிப்பு

இந்தாண்டு தொடக்கம் முதல், மார்ச் 26ஆம் தேதி வரை பெறப்பட்ட தகவலின்படி, உலகம் முழுவதும், 76.1 கோடி கொரோனா தொற்றுகளும், அதை சார்ந்த உயிரிழப்புகள், 6 கோடியே 80 லட்சம் எனத்தெரிகிறது. அதன்படி தெற்காசிய பிராந்தியத்தில் விகிதாச்சார அடிப்படையில் இந்தியாவில் கரோனா அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு, 1.3 புதிய தொற்றுகள் வீதம் புதிய கொரோனா தொற்றுகள் இந்தியாவில் பதிவாகியுள்ளன. ஆனால், இந்த ஒரு மாத இடைவேளையில், தெற்காசியப் பிராந்தியத்தில் மட்டும் 27 ஆயிரம் புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. இது சென்ற மாதத்தை விட 152 சதவீதம் அதிகமாகும்.