கொரோனா மிருங்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம்: ஆய்வில் தகவல்
கொரோனா தொற்றுநோயின் ஆரம்ப நாட்களில் சீனாவின் வுஹான் நகரிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளின் புதிய பகுப்பாய்வு, கொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குத் பரவியது என்பதற்கான வலுவான சான்றாக இருக்கிறது என்று சில ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். ராக்கூன் நாய்கள் உட்பட பல விலங்குகளின் மரபணுப் பொருட்களில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தான் நோய்தொற்றுக்கு காரணமாக இருந்திருக்க வேண்டும் என்று திறந்த அறிவியல் இணையதளமான Zenodo.org-வில் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹவானான் மொத்த கடல் உணவு சந்தையில் இருந்து தான் கொரோனா பரவி இருக்கிறது என்றும் இந்த அறிக்கை தெரிவித்திருக்கிறது.
ஆய்வக விபத்தில் இருந்து கொரோனா பரவ தொடங்கி இருக்கலாம்: அமெரிக்கா
சில மாதிரிகளில், விலங்குகளில் SARS-CoV-2 நோய்த்தொற்றுகள் இருப்பதைக் குறிக்கும், மனித மரபணுப் பொருள்களைக் காட்டிலும் அதிகமான விலங்குகளின் மரபணுப் பொருட்கள் இருந்தன என்று இந்த அறிக்கை கூறுகிறது. கொரோனா பரவலின் போது வெளியிடப்பட்ட பல ஆய்வுகளைப் போலவே, இந்த ஆய்வும் விஞ்ஞான சமூகத்தால் இன்னும் மதிப்பாய்வு செய்யப்படவில்லை. ஆராய்ச்சியாளர்கள் பகுப்பாய்வு செய்த மரபணுத் தரவை முழுமையாகப் பகிர்ந்து கொள்ளுமாறு உலக சுகாதார அமைப்பு சீனாவிடம் கேட்டு கொண்டுள்ளது. கொரோனா எப்படி பரவ தொடங்கியது என்பதை பற்றி வெளியான மிக சமீபத்திய ஆய்வு இதுவாகும். அமெரிக்காவின் ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் மற்றும் எரிசக்தி துறையானது கோவிட்-19 ஆய்வக விபத்தில் இருந்து பரவ தொடங்கி இருக்கலாம் என்று கூறி இருந்தது.