அமெரிக்காவில் தூங்குவதற்கு மேற்கொள்ளப்படும் சில சுவாரசியமான உத்திகள்
செய்தி முன்னோட்டம்
நல்ல இரவு தூக்கம் மிகவும் ஒரு மனிதனின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது என்பதை பலரும் அறிந்திருப்பீர்கள்.
கூடுதலாக, பல ஆய்வுகள், தரமான தூக்கம் (7-9 மணிநேரம்) உங்கள் அறிவாற்றல், மனநிலை, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடல் ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதையும் காட்டுகிறது.
ஆனால் தற்போது இருக்கும் பரபரப்பான உலகில், பலருக்கும் படுத்ததும் நிம்மதியான உறக்கம் வந்துவிடுவதில்லை.
சிலர் மருத்துவர் உதவியை நாடுவதுண்டு. ஒரு சிலர் தங்கள் மூதாதையர்கள் சொல்வதை கேட்டு, பண்டைய வழக்கங்களை கடைபிடிப்பதுண்டு
சுவாரசியமாக, இந்த வழக்கங்கள் மருத்துவ உலகில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அப்படி உலகின் ஓவ்வொரு நாட்டிலும் கடைபிடிக்கப்படும் உத்திகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
ஜப்பானில் எப்படி தூங்குகிறார்கள் என தெரிந்து கொள்ள ஆசையா?
card 2
பொம்மை: குவாத்தமாலா
மத்திய அமெரிக்காவில் உள்ள குவாத்தமாலாவில் வசிப்பவர்கள், அவர்களின் தலையணைக்கு அடியில் 'கவலை பொம்மை' என்று அழைக்கப்படும் ஹக்சி பொம்மையை வைத்துக்கொள்வார்கள்.
இது மட்டுமின்றி, கவுதமாலாவில் உள்ள குழந்தைகள் இந்த கவலை பொம்மைகளுடன் பேசிக்கொண்டே, தூங்கிவிடுகிறார்கள்; இது மிகவும் பொதுவான நடைமுறை.
இது அவர்களின் பாரம்பரியமாக கருதுகிறார்கள்.
உங்கள் கவலைகளை வெளியேற்றி விட்டு தூங்குவதால், விரைவில் தூக்கம் வரும் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
card 3
தனி அறை: அமெரிக்கா
ஒரு கணக்கெடுப்பின்படி, 2023ஆம் ஆண்டு வரை அமெரிக்காவில் 25 சதவீதத்திற்கும் அதிகமான தம்பதிகள் தனித்தனியான தூங்கும் இடங்களை விரும்புகிறார்கள்.
சிலருக்கு, இது வெவ்வேறு அறைகளில் தூங்குவதைக் குறிக்கிறது, மற்றவர்கள் ஒரே அறையில் தனி தனி படுக்கைகளைத் தேர்வு செய்கிறார்கள்.
அமெரிக்காவில், இவ்விரண்டும் பொதுவானது. இது 'Sleep Divorce' என்று அழைக்கிறார்கள்.
வேலை காரணமாக வெவ்வேறு தூக்க அட்டவணைகளைக் கொண்ட சில ஜோடிகளுக்கு இது உண்மையில் நல்ல யோசனை என மருத்துவர்களும் ஆமோதிக்கிறார்கள்