
உங்களுக்கு PCOS இருப்பதை கண்டுபிடிப்பதற்கான அறிகுறிகள்
செய்தி முன்னோட்டம்
பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) என்பது ஒருவகை ஹார்மோன் கோளாறு ஆகும். இது வயது வந்த பெண்களை அதிகம் பாதிக்கிறது.
PCOS என்பது இனப்பெருக்க ஹார்மோன்களின் சமநிலையின்மையால் ஏற்படும். இதை பல அறிகுறிகளால் கண்டறியலாம்.
PCOS-ஐ முன்கூட்டியே கண்டறிவதும், அதற்குரிய சிகிச்சை பெறுவதும் மிகவும் முக்கியம்.
ஒவ்வொரு பெண்ணும் அறிந்திருக்க வேண்டிய PCOS-இன் ஐந்து பொதுவான அறிகுறிகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
ஒழுங்கற்ற பீரியட்ஸ்: மாதவிடாய் சுழற்சிகள் ஒழுங்கற்ற முறையில், சீரில்லாமல் இருந்தால், அது PCOS-இன் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும். PCOS உடைய பெண்கள் அமினோரியா என்ற நிலை ஏற்படலாம். சுழற்சியின் நீளம் பெரிதும் மாறுபடும் மேலும் மாதவிடாய்க்கு இடையேயான நேரம் அடிக்கடி 35 நாட்களுக்கு மேல் இருக்கும்.
card 2
PCOS -இன் அறிகுறிகள்
அதிகப்படியான முடி வளர்ச்சி: அதிகப்படியான முடி வளர்ச்சி, PCOS இன் மற்றொரு முக்கிய அறிகுறியாகும். PCOS கோளாறு இருக்கும் பெண்களுக்கு பெரும்பாலும் முகம், மார்பு, முதுகு அல்லது அடிவயிற்றில், முடி வளர்ச்சி ஏற்படும். ஆண்ட்ரோஜன்களின் அளவு அதிகரிப்பதால் இது நிகழ்கிறது. அவை பொதுவாக ஆண் ஹார்மோன்களாகக் கருதப்படுகின்றன.
முகப்பரு மற்றும் தோல் பிரச்சினைகள்: PCOS மூலம் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், முகப்பரு மற்றும் பிற தோல் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிப்பதால், சரும எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பதால், அடைபட்ட துளைகளால் முகப்பருக்கள் ஏற்படுகின்றன.
எடை ஏற்ற இறக்கங்கள்: PCOS உள்ள பல பெண்கள், அவ்வப்போது எடை மாறுதல்களை எதிர்கொள்வார்கள். இன்சுலின் எதிர்ப்பு, PCOS இன் பொதுவான அம்சம்.