NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / ஹோலி கொண்டாட்டத்தின் போது, குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறிப்புகள்
    ஹோலி கொண்டாட்டத்தின் போது, குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறிப்புகள்
    வாழ்க்கை

    ஹோலி கொண்டாட்டத்தின் போது, குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறிப்புகள்

    எழுதியவர் Venkatalakshmi V
    March 06, 2023 | 01:14 pm 1 நிமிட வாசிப்பு
    ஹோலி கொண்டாட்டத்தின் போது, குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறிப்புகள்
    ஹோலி கொண்டாட்டத்தின் போது, குழந்தைகளை பாதிப்பதை மறவாதீர்

    ஹோலி பண்டிகை இன்னும் 2 நாட்களில், நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படும். வரும் மார்ச் 8-ஆம் தேதி, கலர் வண்ணங்களை தூவி, இனிப்புகளை பரிமாறி, ஆனந்தமாக கொண்டாடப்படும் இந்த திருவிழாவின் போது, குழந்தைகளின் பாதுகாப்பும் முக்கியம். சில ஆண்டுகளுக்கு முன்னர், சென்னையில், இது போன்ற ஹோலி திருவிழாவில், தண்ணீரில் மூழ்கி ஒரு குழந்தை இறந்து போனதை மறந்திருக்க முடியாது. அதனால், குழந்தைகளை பாதுகாக்க, சில பாதுகாப்பு குறிப்புக்கள் இதோ; இயற்கை வண்ணங்களை பயன்படுத்தவும்: செயற்கை வண்ணங்களில் ஈயம், பாதரசம் மற்றும் அலுமினியம் புரோமைடு போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உள்ளன. அவை உங்கள் குழந்தையின் தோலை சேதப்படுத்தலாம். மருதாணி, மஞ்சள், சந்தனம், பலாஷ் பூக்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி ஆர்கானிக் வண்ணங்களை வீட்டிலேயே செய்யலாம்.

    விளையாட செல்லும் முன், எண்ணெய் அல்லது மாய்ஸ்சரைசிங் க்ரீமை தடவவும்

    தண்ணீர் பலூன்களைத் தவிர்த்து, பிச்காரிகளை பயன்படுத்துங்கள்: தண்ணீர் பலூன்கள் கொண்டு விளையாடுவது வேடிக்கையாக இருக்கலாம், ஆனால் அவை பாதுகாப்பானவை அல்ல. சில நேரங்களில் அவை உங்களை காயப்படுத்த நேரிடும். மேலும், ஒருவரின் முகம், கண்கள் மற்றும் காதுகளில் தண்ணீர் தெளிப்பதைத் தவிர்க்கவும். பொருத்தமான ஆடைகளை அணிவிக்கவும்: குழந்தைகளுக்கு, அவர்கள் தோலை முடிந்தவரை மறைக்கும் ஆடைகளை அணிவிக்கவும். விளையாடி முடித்ததும், ஈர ஆடைகளை உடனே மாற்றிவிடவும். குழந்தைகள் சருமத்தை பாதுகாக்கவும்: குழந்தைகள், ஹோலிக்கு விளையாட செல்லும் முன்னர், அவர்கள் சருமத்தை பாதுகாக்க, தேங்காய், ஆலிவ் அல்லது கடுகு எண்ணெயை அவரது உடல் முழுவதும் தடவவும். அது ஒரு பாதுகாப்பு அடுக்காக செயல்பட்டு, ஹோலி வண்ணங்கள், உடலில் ஒட்டாமல் தடுக்கிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    பண்டிகை
    இந்தியா

    பண்டிகை

    ஹோலியைப் போலவே உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகள் பற்றி காணலாம் உலகம்
    ரம்ஜான் 2023: நோன்பின் தேதிகள், முக்கியத்துவம் மற்றும் விதிகள் வாழ்க்கை
    ஏப்ரல் 14 , தமிழ் புத்தாண்டாக எதற்காக கொண்டாடுகிறோம் தெரியுமா? தமிழ்நாடு
    தமிழ் புத்தாண்டு 2023: டெல்லியில் புத்தாண்டுக் கொண்டாட்டம் டெல்லி

    இந்தியா

    மகளிர் தினத்தில் சிறந்த கிஃப்ட்-டை கொடுக்க வேண்டுமா? சிறந்த கேட்ஜெட்ஸ் இங்கே! தொழில்நுட்பம்
    ஏசி வாங்க போறீங்களா...? கண்டிப்பா இதை எல்லாம் மறக்காம செய்யுங்க! தொழில்நுட்பம்
    நகரங்களில் வாழும் பெண்கள் ஏன் வெளியே செல்வதில்லை டெல்லி
    எலக்ட்ரிக் வாகனங்களை இப்படி சார்ஜ் செய்தால் பேட்டரி ஆயுள் நீடிக்கும்! எலக்ட்ரிக் வாகனங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை

    வாழ்க்கை செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Lifestyle Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023