ஹோலியைப் போலவே உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகள் பற்றி காணலாம்
செய்தி முன்னோட்டம்
ஹோலி என்பது இந்தியாவிலும், நேபாளத்திலும் முக்கியமாகக் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான மற்றும் மகிழ்ச்சியான பண்டிகை. ஆனால் உலகின் பிற பகுதிகளிலும் இதே போன்ற பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அவற்றை பற்றி ஒரு சிறு பார்வை.
சோங்க்ரான்: சோங்க்ரான் என்பது தாய்லாந்து மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் ஒரு சில பகுதிகளில் கொண்டாடப்படும் ஒரு நீர் திருவிழா ஆகும். தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் தை திருவிழாவை போலவே, அங்கும் இது தை புத்தாண்டைக் குறிக்கிறது. மக்கள், ஒருவருக்கொருவர் தண்ணீரை வீசி கொண்டாடுகிறார்கள்.
லா டொமாடினா: லா டொமடினா என்பது தக்காளி வீசும் ஸ்பெயின் திருவிழா ஆகும். ஆண்டுதோறும்,ஆகஸ்ட் மாதத்தின் கடைசி புதன்கிழமை, ஸ்பெயினில் உள்ள புனோலில் நடைபெறும். ஹோலியைப் போலவே, இந்த திருவிழாவில் ஒருவருக்கொருவர் தக்காளியை வீசி கொண்டாடிக்கொள்கிறார்கள்.
பண்டிகை
வண்ணமயான பிரேசில் கார்னிவல்
போரியோங் மண் திருவிழா: இந்த திருவிழா, ஜூலை மாதத்தில், தென் கொரியாவின் போரியோங்கில் நடைபெறுகிறது. இந்தத் திருவிழாவில், மண் மல்யுத்தம், மண் சறுக்கல் மற்றும் பிற சேறு சார்ந்த விளையாட்டுகளுடன் கொண்டாடுகிறார்கள்.
Dia de los Muertos: மெக்சிகோவில், நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடைபெறும், இந்த திருவிழா, இறந்தவர்களுக்காக கொண்டாடப்படுவது. இந்த விழாவின் போது, வண்ணமயமான ஆடைகள், சர்க்கரை மண்டை ஓடுகள் மற்றும் இறந்தவர்களைக் கௌரவிக்கும் பலிபீடங்களை வணங்கி கொண்டாடுவார்கள்.
பிரேசில் கார்னிவல்: உலகப்புகழ் பெற்ற பிரேசில் கார்னிவல், தவக்காலம் தொடங்குவதற்கு முன்பு, பிரேசிலில் நடக்கும் வண்ணமயமான மற்றும் கலகலப்பான திருவிழா. இதில் அணிவகுப்பு, இசை, நடனம் மற்றும் வித்தியாசமான ஆடைகளை அணிந்து ஊர்வலமாக மக்கள் செல்வார்கள்.