இந்தியாவில் கொண்டாடப்படும் நாட்டுப்புற திருவிழாக்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
உலகின் பழமையான நாகரீகங்களில் ஒன்றாக கருதப்படும் இந்தியா, அதன் சொந்த மரபுகள் மற்றும் வளமான கலாச்சாரத்திற்கு நன்கு அறியப்பட்டதாகும். தீபாவளி, ஹோலி போன்ற புகழ்பெற்ற இந்தியப் பண்டிகைகளைத் தவிர, பாரம்பரிய பாடல்கள், நடனங்கள் மற்றும் சாகச விளையாட்டுகள் நிறைந்த நாட்டுப்புற விழாக்கள், இன்றும் கொண்டாடப்படுகிறது. அப்படி, இந்தியாவில் கொண்டாடப்படும் சில பிரமாண்ட நாட்டுப்புற விழாக்களை பற்றி சிறு குறிப்பு: நாகாலாந்து மோட்சு திருவிழா: அயோ பழங்குடியினரால், கோடை பயிர்கள் விதைக்கப்பட்ட உடனேயே, கொண்டாடப்படும் மோட்சு திருவிழா, அன்பு, நல்லிணக்கம் மற்றும் தொடர்பைக் குறிக்கும் மூன்று நாள் பழங்குடி விழாவாகும். விழாக்களில், மக்கள் நெருப்பைச் சுற்றி பாரம்பரிய நாட்டுப்புற நடனங்களை நிகழ்த்துகிறார்கள். மேலும் பழங்குடிப் பெண்கள், உள்ளூர் உணவை, அரிசி மற்றும் பீருடன் பரிமாறுகிறார்கள்
ராஜஸ்தானின் பாலைவன திருவிழா
லடாக் ஹெமிஸ் திருவிழா: 300 ஆண்டுகளுக்கு மேல், பௌத்தர்களால் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா, திபெத்திய சந்திர மாதமான, செ-சூவின் 10வது நாளில் வருகிறது. மேலும் இது குரு பத்மசாம்பவாவின் பிறந்தநாளை நினைவுகூரும். திருவிழாவின் முக்கிய ஈர்ப்பு லாமாக்கள் ஆடும் சாம் எனப்படும் முகமூடி நடனம் ஆகும். ஜெய்சால்மர் பாலைவன திருவிழா: தார் பாலைவனத்தின் அழகிய மணல் திட்டில் நடைபெறும் இந்த விழா, ஒவ்வொரு ஆண்டும், பிப்ரவரியில் நடைபெறும். அசாம் பிஹு பண்டிகை: அசாமின் பிரபலமான கோடை விழாக்களில் ஒன்றான பிஹு அசாமிய புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கிறது. அசாமில் மூன்று வகையான பிஹு கொண்டாடப்படுகிறது. அதில், ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படும் போஹாக் பிஹு மிகவும் பிரபலமானது.