
சமையல் குறிப்பு: மாலை நேரத்தில் இந்த சூப்பரான வெஜ் மீட் பால்ஸ் செய்யலாமே
செய்தி முன்னோட்டம்
தற்போது தமிழ்நாட்டில், பருவமழை பெய்யத்தொடங்கி விட்டது. இந்த மழை நேரத்தில், சூடாக ஏதாவது சாப்பிடவேண்டும், அதே நேரத்தில் அது வித்தியாசமாகவும், சத்தாகவும் இருக்கவேண்டும் என நினைக்கிறீர்களா?
இதோ உங்களுக்காக, காரமான, சுவையான வெஜ் மீட் பால்ஸ்.
இதில் பூண்டு மற்றும் பிரெஷ்ஷாக அரைத்த கருப்பு மிளகு ஆகியவற்றை சேர்ப்பதால், உணவுகளுக்கு அற்புதமான சுவையைத் தருகின்றன.
இந்த மீட் பால்ஸை நீங்கள் ஸ்டார்டர் போலவும் சாப்பிடலாம், அல்லது, சாதம், சப்பாத்தி போன்றவற்றிற்கு, சைடு டிஷ் போலவும் சாப்பிடலாம்.
இதில் பலவகை காய்கறிகளை சேர்ப்பதால், ஊட்டச்சத்தும் நிறைந்துள்ளது.
இதில் சேர்க்கப்படும் வாழைக்காய், இறைச்சியால் செய்யப்படும் மீட் பால்ஸ் போன்ற சுவையை தரும்.
card2
தேவையான பொருள்கள்
2 பச்சை வாழைப்பழம் வேகவைக்கப்பட்டது
1 வெங்காயம் நறுக்கியது
½ கப் பூசணி துருவியது
½ கப் முட்டைக்கோஸ் துருவியது
1 தேக்கரண்டி மிளகாய் தூள்
½ தேக்கரண்டி மஞ்சள் தூள்
1 டீஸ்பூன் கொத்தமல்லி தூள்
1 டீஸ்பூன் சீரக தூள்
1 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
சுவைக்கு உப்பு
1 தேக்கரண்டி சீரகம்
3 டீஸ்பூன் எண்ணெய்
1 டீஸ்பூன் கொத்தமல்லி இலைகள்
அலங்கரிக்க:
3 டீஸ்பூன் வெங்காயம் பொடியாக நறுக்கியது
3 டீஸ்பூன் பூண்டு பொடியாக நறுக்கியது
1 டீஸ்பூன் கருப்பு மிளகு பொடி
1 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
1 தேக்கரண்டி சோயா சாஸ்
1 துளிர் கறிவேப்பிலை
அழகுபடுத்த கொத்தமல்லி இலைகள்
card 3
செய்முறை
வாழைக்காயை 15-20 நிமிடங்கள் ஆவியில் நன்றாக வேகவைக்கவும். ஆறிய பின்னர், தோலை நீக்கி துருவவும்.
ஒரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, அதில் சீரகத்தை சேர்த்து வதக்கவும். அதனோடு வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின்னர், பூசணி மற்றும் முட்டைக்கோஸ் சேர்த்து நன்கு கலக்கவும். தண்ணீர் தெளிக்க வேண்டாம். அந்த பூசணி காயிலிருந்து தண்ணீர் விடும். அந்த தண்ணீர் முற்றிலுமாக நீங்கும் வரை, சமைக்கவும்.
பின்னர், அனைத்து உலர்ந்த மசாலா பொடிகளையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
ஒரு பாத்திரத்தில் துருவிய வாழைக்காயை எடுத்து, அதில் இந்த தயாரிக்கப்பட்ட மசாலாவை சேர்த்து நன்கு கலக்கவும்.
பின்னர், அவற்றை நெல்லிக்காய் அளவு உருண்டைகளை உருட்டி தனியாக வைக்கவும்.
card 4
செய்முறை
ஒரு வாணலியில், 1 டீஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, அதில் இந்த உருண்டைகளை போட்டு, 10-15 நிமிடங்கள், பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
பின்னர், அவற்றை தனியாக வைக்கவும்.
அதே சட்டியில், 1 டீஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, அதில் பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
அதனுடன், கறிவேப்பிலை, வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
இப்போது இதில் பொரித்த உருண்டைகளைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
அதனுடன், சோயா சாஸ், மிளகுத்தூள் மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு கலக்கவும்.
சூடான வெஜிடேரியன் மீட் பால்ஸ் தயார்.