உங்கள் சருமத்தை பளபளப்பாக பூசணி அடிப்படையிலான ஃபேஸ் மாஸ்க்
செய்தி முன்னோட்டம்
பூசணி ஒரு சமையல் காயாக மட்டுமே நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், சரும பராமரிப்பிற்கு உதவும் ஒரு அழகு சாதனமாக அதை பயன்படுத்தி உள்ளீர்களா?
பீட்டா கரோட்டின், அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் இயற்கை என்சைம்கள் ஆகியவற்றால் நிறைந்துள்ள இந்த காய், உங்கள் தோல் ஆரோக்கியத்திற்கு ஒரு சிறந்த ஹீரோ.
ஃபேஸ் மாஸ்குகளில் பூசணிக்காயைப் பயன்படுத்துங்கள்.
அது முகத்தை பொலிவாக மட்டுமின்றி, உங்கள் நிறத்தை புதுப்பிக்கவும் உதவும்.
இயற்கையாகவே உங்கள் சருமத்தை வளப்படுத்தவும், ஒளிரவும், புத்துணர்ச்சியூட்டும் தோற்றத்தை வெளிப்படுத்தவும் இந்த நேரடியான பூசணிக்காய் ஃபேஸ் மாஸ்க்குகளைத் தேர்ந்தெடுங்கள்.
அழகு குறிப்புகள்
நீங்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய பூசணி ஃபேஸ் மாஸ்க்
பூசணி கூழ் மற்றும் தேன் மாஸ்க்: உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கு, இரண்டு தேக்கரண்டி பூசணிக்காய் கூழ் மற்றும் ஒரு தேக்கரண்டி தேனுடன் கலக்கவும். தேன், இயற்கையான ஈரப்பதமூட்டியாக, சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்கவைக்க சிறந்தது.
பூசணி மற்றும் நாட்டு சர்க்கரை ஸ்க்ரப்: பொலிவிழந்த சருமத்தை மீட்டெடுக்க, இரண்டு தேக்கரண்டி பூசணி ப்யூரியை ஒரு தேக்கரண்டி நாட்டு சர்க்கரையுடன் இணைத்து முகத்தில் பூசவும்.
பூசணி மற்றும் தயிர் மாஸ்க்: முகத்தை பிரகாசமாக்க, இரண்டு தேக்கரண்டி பூசணி ப்யூரியை ஒரு தேக்கரண்டி வெறும் தயிருடன் கலந்து பூசவும்.
பரங்கிக்காய் மற்றும் ஓட்ஸ் மாஸ்க்: உணர்திறன் சருமம் உள்ளவர்களுக்கு, இரண்டு தேக்கரண்டி பரங்கிக்காய் ப்யூரியை ஒரு தேக்கரண்டி அரைத்த ஓட்மீல் சேர்த்துக் கலந்து பூசினால் நிவாரணம் கிடைக்கும்.