Page Loader
நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது விரைவில் மரணத்தை வரவழைக்கிறது: ஆய்வு
, தினமும் 11 மணி நேரத்திற்கும் மேலாக உட்கார்ந்திருப்பவர்களுக்கு மரணத்திற்கான ஆபத்து 57% அதிகம்

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது விரைவில் மரணத்தை வரவழைக்கிறது: ஆய்வு

எழுதியவர் Venkatalakshmi V
Mar 19, 2024
09:27 am

செய்தி முன்னோட்டம்

கலிபோர்னியா பல்கலைக்கழகம், சான் டியாகோ நடத்திய சமீபத்திய ஆய்வில், நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் குறித்து வெளிச்சம் போட்டுக்காட்டப்பட்டுள்ளது. ஆய்வில், 63-99 வயதுக்குட்பட்ட 5,856 பெண் பங்கேற்பாளர்கள் ஒரு தசாப்தமாக கண்காணிக்கப்பட்டனர். இதில் 1,733 பங்கேற்பாளர்கள் இறந்துவிட்டனர். ஒரு நாளைக்கு, ஒன்பதரை மணி நேரத்திற்கும் குறைவாக அமர்ந்திருப்பவர்களுடன் ஒப்பிடுகையில், தினமும் 11 மணி நேரத்திற்கும் மேலாக உட்கார்ந்திருப்பவர்களுக்கு மரணத்திற்கான ஆபத்து 57% அதிகம் என்று கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன. பிரபலமான நம்பிக்கைக்கு மாறாக, தினசரி உடற்பயிற்சியால் கூட அதிகமாக உட்காருவதால் ஏற்படும் உடல்நல அபாயங்களை தடுக்க முடியாது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதிக நேரம் மிதமான மற்றும் தீவிரமான உடற்பயிற்சி செய்தாலும், அகால மரணம் ஏற்படும் அபாயம் நீடித்தது.

ஆய்வு

ஆய்வறிக்கை தெரிவிப்பது என்ன?

இது 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, அதிகரித்த உடல் செயல்பாடுகளினால் கூட, டைப் 2 நீரிழிவு , பக்கவாதம் மற்றும் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் இதய நோய்கள் போன்ற நோய்களின் அபாயத்தை முழுமையாக நீக்கமுடியாது என்பதைக் கண்டறிந்துள்ளது. எனினும், உலக சுகாதார அமைப்பு (WHO) வயது வந்தவர்கள் யாவரும் தாங்கள் உட்காரும் நேரத்தைக் கட்டுப்படுத்தவும், நீண்ட நேரம் உட்காருவதை தவிர்க்கவும் பரிந்துரைக்கிறது. தினமும் ஏழு மணிநேரம் உட்காருவது கூட தீங்கு விளைவிக்கும் என்றும், தொடர்ந்து 30 நிமிடங்களுக்கு மேல் உட்காருவது இரத்த சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என்றும் மற்ற ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன.