விமான பயணத்தில் கேபின் பேகேஜில் அனுமதிக்கப்படாத பொருட்களின் பட்டியல்
நீங்கள் அடிக்கடி விமானத்தில் பயணம் செய்தால், விமானப் பயணத்தின் போது தடைசெய்யப்பட்ட பொருட்களின் பட்டியலை நீங்கள் நன்கு அறிந்திருக்கக்கூடும். பாதுகாப்பு கருதி விமான நிலையங்களுக்குள் ஒரு சில பொருட்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அதோடு, விமானக் கடத்தல்களை தவிர்க்கவும், ஒரு சில பொருட்களை பயன்படுத்த தடை விதித்துள்ளது, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம். அதையும் மீறி, தடை செய்யப்பட்ட பொருட்களை நீங்கள் எடுத்து சென்றால், உங்களது பைகள் அனுமதிக்கப்படாது. சிலநேரங்களில் உங்களை கைது செய்யவும் நேரிடும். எனவே, பாதுகாப்பான மற்றும் தடையற்ற பயண அனுபவத்தை உறுதிசெய்ய, விமான நிலையங்களின் விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை நன்கு அறிந்திருப்பது மிகவும் முக்கியமானது. விமான நிலைய பாதுகாப்பு சோதனையின் போது அனுமதிக்கப்படாத பொருட்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
கேபின் பேக்கேஜில் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்ட பொருட்கள்
கூர்மையான பர்சனல் பொருட்களான, லைட்டர்கள், கத்தரிக்கோல், ஃபோர்க், துப்பாக்கிகள், மற்றும் துப்பாக்கிகள் போன்ற தோற்றம் கொண்ட கூர்மையான பொம்மைகள் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது. வில் மற்றும் அம்புகள், கிரிக்கெட் மட்டைகள், பேஸ்பால் மட்டைகள், ஈட்டி துப்பாக்கிகள் மற்றும் கோல்ஃப் கிளப்புகள் போன்ற விளையாட்டு பொருட்களுக்கும் தடை. எரிபொருள்கள், பெட்ரோல், கேஸ் டார்ச்ச்கள், இலகுவான திரவம், ஏரோசோல்கள், ஜெல் பேஸ்ட் மற்றும் பிற எரியக்கூடிய பொருட்கள், AAI ஆல் அபாயகரமானதாகக் கருதப்படுகின்றன. கூடுதலாக, தற்போது ஒரு சில விமான நிலையங்களில், மொபைல் பவர் பேங்க்கள், அவற்றின் கட்டமைப்பு மற்றும் வேதியியல் கலவை காரணமாக வெடிபொருட்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.