பேஷன்: தென்னிந்தியாவில் பிரபலமான எம்பிராய்டரி டிசைன்கள் பற்றி சிறு குறிப்பு
செய்தி முன்னோட்டம்
தென்னிந்தியா, அதன் வளமான கலாச்சார பாரம்பரியத்திற்காக அறியப்படுகிறது. அதில் ஒன்றாக, அந்தந்த பிராந்தியத்தின் மரபுகள் மற்றும் கலைத் திறனை பிரதிபலிக்கும் விதமாக, தனித்துவமான மற்றும் வசீகரிக்கும் எம்பிராய்டரி டிசைன்களும் நடைமுறையில் உள்ளது.
பளீர் வண்ணங்கள் முதல் சிக்கலான வடிவங்கள் வரை, தென்னிந்திய எம்பிராய்டரி அதன் நேர்த்தியான கைவினைத்திறனுக்காக உலகளவில் பிரபலமடைந்துள்ளது.
தலைமுறைகளைத் தாண்டி இதயங்களைக் கவர்ந்த தென்னிந்திய கைவினைத்திறன் பற்றி ஒரு சிறு தொகுப்பு.
கசுதி:கர்நாடகாவில், சாளுக்கியர் காலத்தில் தோன்றியதாக கருதப்படும் இந்த கசுதி எம்பிராய்டரி, எண்கோண வடிவங்கள் மற்றும் கோயில் உருவங்கள் ஆகியவற்றால் பிரபலம். இந்த வகை வடிவங்கள், துணியின் இருபுறமும் ஒரே போல தோற்றம் தரும். இவ்வகை வேலைப்பாடுகள் பெரும்பாலும் பிஜாப்பூர், தார்வாட் மற்றும் கூர்க் போன்ற ஊர்களில் கிடைக்கும்.
card 2
தென்னிந்திய கைவினைத்திறன்
தோடா: நீலகிரி மலையில் வாழும் தோடா பழங்குடியினரால் செய்யப்படுகிறது. தோடா/ டோடா வேலைப்பாடுகள், கருப்பு மற்றும் சிவப்பு கம்பளி நூல்களைப் பயன்படுத்தி, கரடுமுரடான வெள்ளை துணியில், எண்கோண வடிவமைப்பில் செய்யப்படும். பெரும்பாலும், தோடா பெண்களால் செய்யப்படும் இந்த கைவினைகளில், பிராந்திய புராணக் கதைகள், இப்பகுதியின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை பிரதிபலிக்கும்.
பஞ்சாரா: தெலுங்கானாவில் உள்ள பஞ்சாரா என்ற நாடோடி பழங்குடியினர் செய்வது. இதில், குறுக்கு-தையல் நுட்பங்கள், கண்ணாடி மணிகள், நாணயங்கள் ஆகியவை சேர்க்கப்படும்.
சந்தூர் லம்பானி எம்பிராய்டரி: கர்நாடகாவின் சந்தூர் பகுதியில் உள்ள லம்பானி சமூகத்தினரால் உருவான எம்பிராய்டரி வடிவம். அடர் நீலம் அல்லது சிவப்பு கைத்தறி துணி மீது darning செய்யப்படும். இதிலும், கண்ணாடிகள், மணிகள் மற்றும் நாணயங்கள் போன்றவை பயன்படுத்தப்படுகிறது.