நீங்கள் வீட்டில் வைக்கக்கூடாத தாவர வகைகள்
செய்தி முன்னோட்டம்
தாவரங்கள் மிக முக்கியமான வீட்டு அலங்காரங்களில் ஒன்றாகும். இது ஒருவரின் இடத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், சுத்தமான மற்றும் இயற்கையான சூழலை அளிக்கிறது.
இருப்பினும், துரதிர்ஷ்டத்தைத் தரும் என்று நம்பப்படும் சில தாவரங்களை நீங்கள் வீட்டிற்கு ஒருபோதும் கொண்டு வரக்கூடாது என்பது உங்களுக்குத் தெரியுமா?
கவர்ச்சிகரமானதாக இருந்தாலும், வீடுகளுக்கு ஏற்றதாக கருதப்படாத சில தாவர வகைகள் இதோ:
card 2
கற்றாழை
சீனாவின் ஃபெங் சுய் கருத்துப்படி, கற்றாழை மற்றும் அதுபோன்ற முள் செடிகள் (ரோஜாக்கள் தவிர) எதிர்மறை ஆற்றலை வெளிப்படுத்தும் என்பதால், அவற்றை வீட்டில் வைத்திருக்கக்கூடாது.
அவை உறவுகளுக்குள் உராய்வை ஏற்படுத்தும் என்றும், மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை ஏற்படுத்தலாம் என்றும், துரதிர்ஷ்டவசமான சம்பவங்களை ஏற்படுத்தக்கூடும் என்று கூறுகிறது.
வாஸ்து சாஸ்திரம் கூட இதை ஆதரிக்கிறது. கற்றாழையை (இயற்கையான செடியாக இருந்தாலும் அல்லது போலியான பிளாஸ்டிக் செடியாக இருந்தாலும்) வீட்டில் வைக்காமல் இருப்பது நல்லது.
card 3
போன்சாய்
போன்சாய் செடிகள் சந்தேகத்திற்கு இடமின்றி அழகாக இருக்கும். ஆனால் வீட்டிற்கு கொண்டு வரக்கூடாது. காரணம்? அழகாக இருக்கிறது என பரிசாகக் கொடுக்கப்படும் இந்த செடி, துரதிர்ஷ்டத்தைத் தரும் என்று பலர் நம்புகிறார்கள்.
இது குன்றிய வளர்ச்சி அல்லது வளர்ச்சியை பிரதிபலிக்கிறது என்பதால், இந்த நம்பிக்கை. வாஸ்து சாஸ்திரத்தின் படி, தாவரத்தின் வளர்ச்சி தடைபடுவதால், பொன்சாய் வீட்டில் இருப்பவர்களின் ஆயுளை சீர்குலைக்கும் எனக்கூறுகிறது.
அதனால், ஒருவர் தனது தொழில் அல்லது வியாபாரத்தில் மந்தநிலையை அனுபவிக்க்கூடும். அதனால் போன்சாய் செடி வீட்டில் வைக்காதீர்கள்
card 4
இங்கிலிஷ் ஐவி
இங்கிலிஷ் ஐவி குறிப்பாக புத்தக அலமாரிகள் மற்றும் பிற உட்புற இடங்களை அலங்கரிக்க பயன்படுத்த படுகிறது. பார்ப்பதற்கும் அழகாக இருக்கும்.
ஆனால் அது வீட்டில் வைக்க தகுதியானதா என்றால், 'இல்லை' என்கிறது வாஸ்து சாஸ்திரம்.
வாஸ்து படி, இந்த செடி அரிப்பு, எரியும் உணர்வு மற்றும் எரிச்சல் போன்ற தோல் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
கூடுதலாக, இது பூனைகள் மற்றும் நாய்கள் போன்ற செல்லப்பிராணிகளுக்கு மிகவும் நச்சுத்தன்மையுடையது மற்றும் மனிதர்களுக்கு லேசான ஆபத்துகளையும் ஏற்படுத்தலாம்.
card 5
புளிய மரம்
புளி, ஆன்டிஆக்ஸிடன்ட்களின் வளமான மூலமாகும். ஆனால் இந்த மரம் வீட்டுத் தோட்டங்களில் வைக்கப்படும் போது நோய்களை வரவழைக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த மரத்தை, தீய சக்திகளுடன் தொடர்புடையதாகவும், எதிர்மறையை சக்தியை பரப்பும் என்று புராணக்கதைகள் கூறினாலும், அவற்றிற்கு பின்னால் மருத்துவ காரணங்கள் உண்டு.
விஞ்ஞான ரீதியாக, அதன் அமிலத்தன்மை கொண்ட இலைகள், அருகினில் வளரும் மற்ற தாவரங்களை பதித்து, அதன் வளர்ச்சியை தடுத்துவிடும் என்பதால், புளிய மரத்தை, வீடுகளில் வளர்க்க கூடாது.