Page Loader
எழில் கொஞ்சும் கேரளாவில் நீங்கள் ரசிக்க வேண்டிய சுற்றுலா தலங்கள்
எழில் கொஞ்சும் கேரளா!

எழில் கொஞ்சும் கேரளாவில் நீங்கள் ரசிக்க வேண்டிய சுற்றுலா தலங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
May 10, 2023
04:47 pm

செய்தி முன்னோட்டம்

இந்த வருட கோடை விடுமுறைக்கு குளுமையான கேரளா மாநிலத்திற்கு சுற்றுலா போக திட்டமா? 'Gods own country' என்று அழைக்கப்படும் கேரளா, சுற்றிலும் மலைகளும், நீர்நிலைகளும் நிறைந்த மாநிலமாகும். இயற்கை அழகை சீர்கெடாமல் இன்னும் பாதுகாப்பாக வைத்துள்ளனர். தேயிலை தோட்டங்களால் சூழபட்ட இடத்தில், குளுமையாக ஒரு ஹாலிடே கொண்டாட நீங்கள் விசிட் அடிக்க வேண்டிய இடங்களின் பட்டியல் இதோ: ஆலப்புழா: பேக் வாட்டர்ஸ் நிறைந்த இந்த சுற்றுலா தலத்தில், போட் ஹவுஸ் என்று அழைக்கப்படும் படகு வீட்டில் தங்கலாம். ஆலப்புழா சுற்றி உள்ள கிராமங்களின் வழியாக செல்லும் படகில், நாள்முழுவதும் ரம்யமான சூழலை ரசிக்கலாம். மூணார்: தேயிலை தோட்ட மலைகள் நிறைந்த ஊர். அங்கே இரவிகுளம் தேசிய பூங்கா உள்ளது.

card 2

இயற்கை எழில் கொஞ்சும் கேரளா மலைகள்

வயநாடு: இந்த ஊரில், பசுமையான காடுகள், அழகிய நீர்வீழ்ச்சிகள் போன்றவை உள்ளது. வயநாடு வனவிலங்கு சரணாலயம், எடக்கல் குகைகள் போன்றவற்றோடு, மலைகளில் ட்ரெக்கிங் போகும் வசதியும் உண்டு. கோவளம் பீச்: வெள்ளை மணல் திட்டுகள் கொண்ட கோவளம் பீச்சில், நீர்விளையாட்டுகள் உண்டு. அங்கிருக்கும் ரிசார்ட்களில் ஆயுர்வேத மசாஜ்கள் செய்து கொள்ளும் வசதியும் உண்டு. அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி: பல திரைப்படங்களில் இடம் பெற்ற இந்த நீர்வீழ்ச்சியை, பார்ப்பதற்கு கண்கோடி வேண்டும். அடர்ந்த காடுகளுக்கு நடுவே அமைந்துள்ளது இந்த உயரமான நீர்வீழ்ச்சி. பேக்கல் கோட்டை: 17 ஆம் நூற்றாண்டு பழமையான பேக்கல் கோட்டை, அரபிக்கடலோரம் அமைந்துள்ளது. கோட்டை மேல் இருந்து கடலை ரசித்து வரலாம்.