Page Loader
வரலாறும், கலாச்சாரமும் கைகோர்க்கும் அழகிய யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க வேண்டிய இடங்கள்
சிதிலமடைந்த யாழ்ப்பாண- போர்ச்சுகீஸ் கோட்டை

வரலாறும், கலாச்சாரமும் கைகோர்க்கும் அழகிய யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க வேண்டிய இடங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 06, 2023
09:57 am

செய்தி முன்னோட்டம்

வரலாறும், கலாச்சாரமும், இயற்கை அழகும் நிறைந்த இடத்திற்கு சுற்றலா செல்ல திட்டமா? அப்படியென்றால் இலங்கையின் யாழ்ப்பாணம் ஒரு சிறந்த தேர்வு. இந்த நகரை சிங்களத்திலும், ஆங்கிலத்தில், 'Jaffna' என்று அழைக்கின்றனர். பழங்கால கோட்டைகளின் மிச்சங்கள், கலாச்சாரம் ததும்பும் சந்தைகள், உள்ளூர் உணவுகள் என பலவற்றை, இந்த நகரில் கண்டு மகிழலாம். பழமையான யாழ்ப்பாணக் கோட்டை: சிதிலமடைந்த கோட்டையின் எச்சங்கள், வரலாற்று பிரியர்களை ஈர்க்கும். அந்த கோட்டையின் வரலாறு, ரகசியங்கள், ஆண்ட அரசர்களின் பின்புலங்களை அறியவும், இந்த கோட்டையை பார்க்கலாம். நயினாதீவு படகு சவாரி: தீவில் உள்ள அழகிய கடற்கரைகள், கோவில்கள் மற்றும் தெளிவான கடல் நீரில் நீச்சல் ஆகியவை உங்களை கிறங்கடிக்க வைக்கும். பல்வேறு நீச்சல் விளையாட்டுகளும் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம்

இலங்கையின் மிகப் பெரிய, பழமையான நூலகமான யாழ்ப்பாண நூலகம்

யாழ்ப்பாண நூலகம் மாற்றும் அருங்காட்சியகம்: கலாச்சார பிரதிபலிப்பான இந்த நூலகமும், அருங்காட்சியகமும், தவறவிடக்கூடாத இடங்கள் ஆகும். இங்கே, ஆயிரக்கணக்கான புத்தகங்கள், கையெழுத்துப் பிரதிகள் மற்றும் நம்பமுடியாத இலக்கிய மற்றும் கலாச்சார மதிப்புள்ள பிற படைப்புகள் உள்ளன. இது இலங்கையின் மிகப் பெரிய, பழமையான நூலகமாகும். ஆயிரக்கணக்கான வரலாற்று நூல்கள் உங்களை காலத்தில் பின்னோக்கி அழைத்துச்செல்லும். யாழ்ப்பாண தீபகற்பத்தின் அழகிய கடற்கரைகள்: அமைதியான யாழ்ப்பாண கடற்கரைகள் வெண்மணல் திட்டுக்களை கொண்டது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த கடற்கரைகள் உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலம்.