ஸ்பெயினிற்கு சுற்றுலா செல்லவிருக்கிறீர்களா? மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்!
அற்புதமான கலாச்சாரம், வரலாறு, இயற்கை அழகு கொண்ட ஸ்பெயின் நாடு, ஆண்டுதோறும் அதிகமக்கள் தேர்ந்தெடுக்கும் சுற்றுலாத்தலத்தில் இரண்டாவது இடத்தில உள்ளது. எனினும் அங்கே சுற்றுலா செல்லும்போது சில விஷயங்களைத் தவிர்க்க வேண்டும்! சால்ட் ஷேக்கர் பயன்படுத்தவது: கேட்பதற்கு விநோதனமாக இருந்தாலும், ஸ்பெயின் மக்களிடையே சில பழக்கங்கள் உள்ளன. அதில் ஒன்று சால்ட் ஷேக்கரை ஒரு கையில் இருந்து மற்றொரு கைக்கு மாற்றினால் துரதிருஷ்டம் வருமென நம்புவது. 'அடியோஸ்' என்று கூறாதீர்கள்: 'அடியோஸ்' என்பதற்கு 'குட்பை' என்று அர்த்தம். எனினும், விடைபெறும்போது அவ்வாறாக கூறினால், நீங்கள் அவர்களை மீண்டும் சந்திக்கபோவதில்லை என்று அர்த்தமாகும். அது உண்மையாகவே இருந்தாலும், அவ்வாறு கூறுவது மரியாதை குறைவாக கருதுவார்கள். அதற்கு பதிலாக, 'ஹஸ்டா லுகோ'/'சியாவோ' என்று சொல்லலாம்.
நீச்சலுடையுடன் நடமாடினால், ரூ.16000 வரை அபராதம்!
முத்தத்துடன் வரவேற்கப்பட்டால் திடுக்கிட வேண்டாம்: நம் நாட்டில், கைகூப்பி வணக்கத்துடன் வரவேற்பதை போல, ஸ்பெயின் நாட்டில், கன்னத்தில் முத்தமிட்டு வரவேற்பார்கள். அவ்வாறு அவர்கள் உங்களை வரவேற்கும் போது, பின்வாங்க கூடாது. அது அநாகரீகமாக கருதப்படும். நீச்சலுடை அணிந்து வீதிகளில் நடமாடாதீர்கள்: கடற்கரைக்கும், நீச்சல் குளத்திற்கும் மட்டுமே அணியவேண்டியது நீச்சலுடை. அதை வீதிகளில் அணிந்து நடமாடக்கூடாது.பார்சிலோனா, மலகா மற்றும் பால்மா டி மல்லோர்கா போன்ற துறைமுக நகரங்களில், இது சட்டவிரோதமானதாக கருதப்படுகிறது.மீறினால் ரூ.16000 வரை விதிக்கப்படும். உங்கள் உடைமைகளில் கவனம் தேவை: அதிக சுற்றுலாவாசிகள் நடமாடும் இடம் என்பதால், மோசடி நபர்களும், பிக்பாக்கெட்காரர்களும் நடமாடும் வாய்ப்பு உள்ளது. உங்களிடம் இருக்கும் விலையுயர்ந்த பொருட்களை எல்லாம், கவனமாக வைத்துக்கொள்ள வேண்டும்.