கொல்கத்தாவில் சுற்றுலாவாசிகளை கவரும் டாப் 5 ஜமீன்தார் மாளிகைகள்
கொல்கத்தா நகரம், சுற்றுலாவாசிகளின் விருப்ப பட்டியலில் எப்போதும் இடம் பெற்றிருக்கும். அதற்கு காரணம், பிரிட்டிஷ் காலத்திய இந்த தலை நகரில், இன்றும் பல ராஜ்பரிகள்(ஆடம்பர மாளிகைகள்) உள்ளன. அவற்றில் டாப் 5 பற்றி இங்கே காண்போம்: ஷோபாபஜார் ராஜ்பரி: வடக்கு கொல்கத்தாவில் அமைந்துள்ள ஷோபாபஜார் ராஜ்பரி, சுதனுதி கிராமத்தின் ஆட்சியாளரான மகாராஜா நபகிருஷ்ண தேப் என்பவரால் கட்டப்பட்டது. 1757-ஆம் ஆண்டு முதல், இங்கே விசேஷமான துர்கா பூஜையையும் கொண்டாடுகிறது. ஜோராசங்கோ தாகூர்பாரி: இது, இந்தியாவின் முதல் நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரின் மாளிகையாகும். கொல்கத்தாவின் ரவீந்திர சரணியில் அமைந்துள்ள இந்த மாளிகையில், ஆங்கிலேயர் காலத்தில், பல நாடக அமர்வுகள், நடனங்கள் மற்றும் விருந்துகள் நடைபெற்றது எனக்குறிப்புகள் கூறுகின்றன.
200 ஆண்டுகள் பழமையான அரண்மனை
இட்டாச்சுனா ராஜ்பரி: கொல்கத்தாவில் இருந்து இரண்டரை மணிநேரத்தில் அமைந்துள்ள இட்டாச்சுனா ராஜ்பரி, நன்கு பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய அரண்மனையாகும். பார்கி டாங்கா என்றும் அழைக்கப்படும் இந்த ராஜ்பரி, பார்கிகளில் இருந்த 'குண்டு' எனப்படும் குடும்பத்தால் கட்டப்பட்டது. 200 ஆண்டுகள் பழமையான இந்த அரண்மனையில் பழங்கால கலசங்கள், ஐந்து முற்றங்கள், பழைய நூல்கள் மற்றும் அழகான மண் குடிசைகள் உள்ளன. பாசுபதி: பாக்பஜார் பகுதியில் அமைந்துள்ள பாசுபதி, ஜமீன்தார்களான பசுபதி பாசு மற்றும் நந்தலால் ஆகியோரால், 1879ல் கட்டப்பட்டது. 13ஆம் நூற்றாண்டின் ஹொய்சாலா கட்டுமான பாணியில் கட்டப்பட்டுள்ளது. ராஜ்பரி பவாலி: தெற்கு 24 பர்கானாஸ் பகுதியில் அமைந்துள்ள ராஜ்பரி பாவாலி, 250 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதுடன், அதன் அற்புதமான கட்டிடக்கலைக்காக பெயர்போனது.