இந்தியாவில் அதிகரிக்கும் புதிய கோவிட் மாறுபாடு பரவல்: கவனிக்க வேண்டிய அறிகுறிகள்
JN.1 என்ற புதிய கோவிட் மாறுபாட்டால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது. பல மாநிலங்கள் கட்டாய முகக்கவசத்தை அமல்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறது. அதே நேரத்தில் நிபுணர்கள் அதிகரித்த சோதனை முறைகளை பரிந்துரைக்கின்றனர். கடந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் 358 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 300 கேரளாவில் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில், கோவிட் தொடர்பான ஆறு இறப்புகளும் பதிவாகியுள்ளன. இந்தியாவில் தற்போது வரை 2,669 கோவிட் வழக்குகள் உள்ளன என்று சுகாதார அமைச்சகத்தின் டாஷ்போர்டு கூறுகிறது. மே மாதத்திற்கு பிறகு தற்போது தான் அதிகபட்ச கோவிட் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இந்த பரவலுக்கு காரணமான JN.1 ஐ "ஆர்வத்தின் மாறுபாடு" என்று வகைப்படுத்தியுள்ளது WHO.
புதிய மாறுபாட்டை தொடர்ந்து கவனிக்க வேண்டிய அறிகுறிகள்
காய்ச்சல் மூக்கு ஒழுகுதல் தொண்டை வலி தலைவலி சில சந்தர்ப்பங்களில் இரைப்பை குடல் பிரச்சினைகள் மிகுந்த சோர்வு மற்றும் தசை பலவீனம் மேற்கூறிய அறிகுறிகள் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால் மட்டுமே கோவிட் பரிசோதனை செய்து கொள்ளுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கோவிட் ஒரு பொதுவான சளி என்று நிராகரிக்க கூடாது என எச்சரிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். "Omicron இன் துணை மாறுபாடான JN.1 என்ற புதிய மாறுபாட்டை நாங்கள் கவனித்து வருகிறோம். இது Omicron போல செயல்படும், இது பாதிப்பின் ஒப்பீட்டளவில் லேசானது. ஆனால் என்ன நடக்கிறது என்றால், ஒவ்வொரு புதிய மாறுபாடும் அதிகமாக பரவக்கூடியதாக இருக்கிறது" என WHO-இன் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், NDTVக்கு தெரிவித்துள்ளார்.