ஐரோப்பாவில், கூட்ட நெரிசல் அல்லாத, அதிகம் அறியப்படாத அழகிய சுற்றுலா தளங்கள்
கோடை காலத்தில், ஐரோப்பாவில் டூரிஸ்ட்-சீசன் என்பதால், அந்த கண்டத்தில் உள்ள பிரபலமான இடங்களுக்கு, சுற்றுலா பயணிகள் குவிவார்கள். இருப்பினும், கூட்டநெரிசல் அல்லாத, அதிகம் அறியப்படாத அழகிய சுற்றுலா தளங்கள் பல, ஐரோப்பாவில் உண்டு. அங்கே செல்வதால், கூட்ட நெரிசலில் இருந்து தப்பிக்கலாம், ஐரோப்பாவின் அழகை நிதானமாக ரசிக்கலாம். அதோடு, அதுபோன்ற இடங்களில் விலைவாசியும் குறைவு என்பதால், உங்கள் கையை கடிக்காமல் விடுமுறையை என்ஜாய் செய்யலாம். துலூஸ், பிரான்ஸ்: பிரான்சின் தெற்கில் அமைந்துள்ள துலூஸ், ஒரு பழமையான நகரம். இந்த அழகிய நகரம், சுவையான உணவு வகைகள் மற்றும் அற்புதமான இரவு வாழ்க்கைக்கு பெயர் பெற்றது. பல திருவிழாக்கள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள், ஆண்டு முழுவதும் நிகழும் என்பதால் எப்போதும் இங்கே கொண்டாட்டம் தான்.
அழகான கடற்கரைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் கொண்ட ஜாதர்
ஜாதர், குரோஷியா: அதிகம் அறியப்படாத குரோஷிய நகரமான ஜாதரில், புதிய கடல் உணவுகளை ருசிப்பது,அழகான கடற்கரைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் கொண்ட தேசிய பூங்காக்கள் என பல இடங்கள் உண்டு. ரோமன் மற்றும் வெனிஸ் காலத்தின் எச்சங்கள் மூலம் இந்த பண்டைய நகரத்தின் வளமான வரலாற்றை நீங்கள் ஆராயலாம். உல்லபூல், ஸ்காட்லாந்து: ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்ஸில் உள்ள இந்த சிறிய கிராமம் சுற்றுலாப்பயணிகளுக்கு உகந்தது. கோரிஷாலோச் நீர்வீழ்ச்சியை ரசிப்பது, ஸ்டாக் பொல்லாய்த் மலைக்கு செல்வது, படகு மூலம் அவுட்டர் ஹெப்ரைடுகளுக்குச் செல்வது என இங்கே நீங்கள் ரசிக்க ஏராளமான இடங்கள் உண்டு. ஜமோரா, ஸ்பெயின்: ஸ்பெயினில் உள்ள ஜமோரா நகரம், நன்கு பாதுகாக்கப்பட்ட பழைய 'ரோமானஸ் கலை பாரம்பரியத்தின் காரணமாக 'வரலாற்று கலை தளமாக' நியமிக்கப்பட்டது.