
மக்களுக்கு அதிக செலவு வைக்கும் இந்திய நகரங்களின் பட்டியல்: மும்பைக்கு முதலிடம்
செய்தி முன்னோட்டம்
2023ஆம் ஆண்டுக்கான மெர்சரின் அறிக்கையின்படி, அதிக செலவாகும் நகரங்களின் உலகளாவிய பட்டியலில் 147வது இடத்தை மும்பை பிடித்துள்ளது.
அதே நேரத்தில், உலகளாவிய தரவரிசையில் முதலிடத்தில் ஹாங்காங் உள்ளது.
விலையுயர்ந்த நகரங்களின் பட்டியலில் மும்பைக்கு அடுத்தபடியாக புது டெல்லியும் பெங்களூரும் உள்ளன.
சர்வதேச தரவரிசையில் மும்பை 147வது இடத்திலும், புது டெல்லி 169வது இடத்திலும், சென்னை 184வது இடத்திலும், பெங்களூரு 189வது இடத்திலும், ஹைதராபாத் 202வது இடத்திலும், கொல்கத்தா 211 இடத்திலும், புனே 213வது இடத்திலும் உள்ளன.
இந்த நகரங்களில் வாழ்ந்தால் அதிக செலவாகும் என்பது இந்த ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.
Cost of living
பொருட்களின் விலையை ஒப்பிட்டு இந்த கணக்கெடுப்பு நடந்துள்ளது
ஒவ்வொரு நகரத்திலும் உள்ள 200க்கும் மேற்பட்ட விஷயங்களின் விலையை ஒப்பிட்டு பார்த்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
இதில் வீட்டு வாடகை, உணவு, உடை, வீட்டுப் பொருட்கள், பயண செலவு மற்றும் பொழுதுபோக்கு ஆகியவை அடங்கும்.
உலகளவில், ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் சூரிச் ஆகிய நகரங்கள் அதிக செலவாகும் நகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் புனே ஆகிய நகரங்களில் தங்கினால் மும்பையை விட 50 சதவீதம் குறைவாகவே செலவாகும்.
ஆசியாவின் 'டாப் 35' விலையுயர்ந்த நகரங்களின் பட்டியலில் மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.