
சரும பிரச்சனைனைகளுக்கு 'சர்வரோக நிவாரணி' மருதாணி
செய்தி முன்னோட்டம்
தற்போது இருக்கும் இளம்தலைமுறையினரில் எத்தனை பேர் மருதாணி அரைத்து வைக்கும் பழக்கம் கொண்டுள்ளார்கள் எனத்தெரியவில்லை. திருமண விழாக்களில் கூட மெஹந்தி என ஒரு தனிநாளாக கொண்டாடுகின்றனர்.
மருதாணியை காய வைத்து, பொடியாக்கி, உங்களுக்கு தேவைக்கேற்ற வகைகளில், கைகளில் வரைவதன் பின்னணியில் இருக்கும் மருத்துவ ரகசியம், உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?
ஆம், மருதாணி இல்லை உங்கள் கைகளை சிவப்பாக்க மட்டும் பயன்படுவதில்லை. அதில் பல ஆரோக்கிய குணங்கள் நிரம்பி உள்ளது.
அவை என்னென்ன என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.
ரத்த சுத்தீகரிப்பு: மருதாணி இலைகளை நீரில் கொதிக்கவிட்டு, கஷாயமாக்கி பருகி வர, உடலில் உள்ள ரத்தம் சுத்தீகரிக்கப்படுகிறது என சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
card 2
சருமத்தை பாதுகாக்கும் மருதாணி
ஆழ்ந்த உறக்கம்: மருதாணியின் பூக்களை, சுடுதண்ணீர் கலந்து, அரைத்து குடித்தால், ஆழ்ந்த உறக்கத்திற்கு உதவும் என்கிறார்கள்.
நகசுத்திக்கு மருந்து: பூஞ்சை, பாக்டீரியா தொற்று காரணமாக நகத்தில் தோன்றும் நகசுத்திக்கு, மருதாணி இலையுடன் மஞ்சள் அரைத்து தடவினால், ஒரே வாரத்தில் குணமாகும் என்கிறார்கள்.
வாய் புண்: மருதாணி இலையை கொதிக்க வைத்த தண்ணீர் கொண்டு தொடர்ந்து வாய் கொப்பளித்தால், வாய் புண், தொண்டை புண்கள் சரியாகிவிடும்.
சேற்று புண்: காலில் ஏற்படும் சேற்று புண், பித்தவெடிப்பு போன்றவற்றிற்கு தொடர்ந்து மருதாணியை அரைத்து வைத்தால், சருமம் மிருதுவாவதோடு, அந்த தொற்றுகளையும் விரட்டி அடிக்கிறது.
உடல் சூடு: இந்த கோடைகாலத்தில் ஏற்படும் உடல் சூட்டை தணிக்க, கை,காலில் உள்ள நகக்கணுக்களில் மருதாணி வைக்க, உடல் சூடு தணிகிறது.