Loading...
81 வயதில் புக்கர் விருதை வென்ற எம். ஜான் ஹாரிசன்: தி எண்ட் ஆஃப் எவ்ரிதிங் நாவலுக்கு அங்கீகாரம்
புக்கர் விருதை வென்ற பிரிட்டிஷ் எழுத்தாளர் ஹாரிசன்.

81 வயதில் புக்கர் விருதை வென்ற எம். ஜான் ஹாரிசன்: தி எண்ட் ஆஃப் எவ்ரிதிங் நாவலுக்கு அங்கீகாரம்

எழுதியவர் Vasuki
Nov 10, 2026
02:18 pm

செய்தி முன்னோட்டம்

தனது 81-வது வயதில் 2026-ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க புக்கர் இலக்கிய விருதை வென்று பிரிட்டிஷ் எழுத்தாளர் எம். ஜான் ஹாரிசன் புதிய சாதனை படைத்துள்ளார். லண்டனில் நடைபெற்ற கோலாகல விழாவில், அவர் எழுதிய 'தி எண்ட் ஆஃப் எவ்ரிதிங்' (The End of Everything) என்ற நாவலுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இதன்மூலம் புக்கர் பரிசை வென்ற மிக மூத்த எழுத்தாளர் என்ற தனித்துவமான பெருமையை அவர் பெற்றுள்ளார். முன்னதாக 2019-ஆம் ஆண்டு தனது 79-வது வயதில் கனடா எழுத்தாளர் மார்கரெட் அட்வுட் புக்கர் விருதைப் பெற்றிருந்த சாதனையை இவர் தற்போது முறியடித்துள்ளார். சர்வதேச அளவில் அறிவியல் புனைகதைத் தளத்திலிருந்து புக்கர் விருதை வென்ற முதல் படைப்பாளி என்ற பெருமையும் இவருக்குக் கிடைத்துள்ளது.

நடுவர் குழுவின் முடிவு

நாவலின் கதைக்களம்

வரலாற்றாசிரியர் மேரி பியர்ட் தலைமையிலான நடுவர் குழுவினர், இறுதிப் பட்டியலில் இடம்பெற்ற பிற ஐந்து எழுத்தாளர்களின் நூல்களைக் கடந்து இந்த நாவலை ஒருமனதாகத் தேர்வு செய்தனர்.

இங்கிலாந்தின் கென்ட் கடற்கரைப் பகுதியில் உலகப் பேரழிவிற்குப் பிந்தைய காலக்கட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு, பிலிப் டெனன்ட் என்ற கதாபாத்திரத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்நாவல் புனையப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு, நவீன தொழில்நுட்பம் மற்றும் அரசியல் நிச்சயமற்ற தன்மைகளை நையாண்டியுடன் பேசும் இந்நாவலை, "எதிர்கால கண்ணாடியின் வழியே நிகழ்கால அரசியலைப் பார்க்கும் அற்புதப் படைப்பு" என்று நடுவர் மன்றத் தலைவர் மேரி பியர்ட் பாராட்டியுள்ளார்.

விருது விவரம்

ஹாரிசனின் இலக்கிய பயணம்

இவ்விருதின் மூலம் ஹாரிசனுக்கு 50,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் 62 இலட்சம் ரூபாய்) பரிசுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இறுதிப் பட்டியலில் இடம்பெற்ற மற்ற ஐந்து எழுத்தாளர்களுக்கு தலா 2,500 பவுண்டுகள் வழங்கப்பட்டன.

ஆறு தசாப்தங்களாக இலக்கியத் துறையில் இயங்கி வரும் ஹாரிசனின் 13-வது நாவலான இது, வெறும் 198 பக்கங்களைக் கொண்டு இந்த ஆண்டின் மிகக் குறைந்த பக்க நாவலாகவும் திகழ்கிறது.

"இலக்கிய வகைகளை எல்லைகளாகவும் அடைப்புகளாகவும் பிரித்துப் பார்க்கும் காலம் முடிந்துவிட்டது" என்று விருது குறித்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட ஹாரிசன், ஆர்தர் சி கிளார்க் விருது உட்பட பல்வேறு சர்வதேச இலக்கிய அங்கீகாரங்களை ஏற்கெனவே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT