இளவயதில் முதுமை தோற்றம் என்ற கவலையா? நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டிய பழக்கவழக்கங்கள்
முதுமை என்பது இயற்கையான செயல் என்றாலும், நமது இளமை பருவத்தில் நம் உடல்கள் சரியான முறையில் திறமையாக செயல்படவில்லை என்றால் முதுமை என்பது விரைவாக நிகழலாம். இள வயதிலேயே முதுமை அடைவதை தடுக்க, ஆரோக்கியமான, சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை முக்கியம். ஒருவேளை நீங்கள் உங்கள் தினசரி வாழ்க்கை முறையில் சில தவறுகளை உங்களை அறியாமல் செய்து வருகிறீர்கள் என்றால், அவற்றை உடனடியாக திருத்திக்கொள்வது அவசியம். முதுமையை தள்ளிப்போட உங்கள் வாழ்க்கைமுறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன?
தவறான உடல் மொழி/ தோரணை
நீங்கள் அமரும் தோரணை, நிற்கும் தோரணை போன்றவற்றால் கூட உங்கள் உடல் சீக்கிரம் வயதான தோற்றத்தை பெறலாம். நீங்கள் லேப்டாப் பார்க்கும் போது, கோணலாக சாய்ந்து அமரும் போது, உங்கள் முதுகின் தசைகள் கஷ்டப்படுகின்றன. இதனால் அவை புண்படும். அழுத்தப்பட்ட தசைகள், இறுக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதேபோல், நீங்கள் திரையின் முன்னால் அமரும்போது, உங்களை அறியாமல் உங்கள் கழுத்தை முன்னோக்கி நீட்டி பழக்கப்படுத்தி விடுகிறீர்கள். இது போல, உங்கள் தினசரி வாழ்க்கையில் உங்களை அறியாமல் நீங்கள் பயன்படுத்தும் தோரணைகள், வயதான தோற்றத்திற்கு பங்களிக்கின்றன.
ஒரு டயட் முறையிலிருந்து மற்றொறு டயட் முறைக்கு தாவுதல்
ஒரு டயட் முறையிலிருந்து இன்னொன்றுக்கு மாறுவது உங்கள் ஆரோக்கியத்தில் கேடு விளைவிக்கும். நீங்கள் பின்பற்றும் டயட் முறை பொறுத்து, உங்கள் சருமம் மற்றும் உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகலாம். உதாரணமாக, குறைந்த கொழுப்புள்ள உணவு, உங்கள் சருமத்தை முன்கூட்டியே வறண்டு போக செய்து விடும். உங்கள் உணவில் நீர் சத்து குறைவாக இருந்தாலும், சருமம் வறட்சியாக காணப்படும். அதனால் சீக்கிரத்தில் வயதான தோற்றத்தை ஏற்படுத்தக்கூடும். இதுபோன்ற நேரத்தில் உங்கள் ஊட்டச்சத்து நிபுணரிடம் பேசி, உங்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
சூரிய ஒளி
சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் சருமத்தின் இயற்கையான பிரகாசத்தை சேதப்படுத்துகிறது மற்றும் வயதான செயல்முறையை துரிதப்படுத்துகிறது. கூடுதலாக, உங்கள் சருமம் புற ஊதா கதிர்களின் அதீத வெளிப்பாடல் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் சேதத்தை ஏற்படுத்தும். உங்கள் தினசரி மீளுருவாக்கம் மற்றும் வயதான எதிர்ப்பு மருந்துகள் உட்பட, தோல் பராமரிப்புக்கு பிரத்யேகமான கவனிப்பை தொடங்குவதற்கான சிறந்த காலம் இதுவே. சூரிய ஒளியில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள விரும்பினால், சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது அவசியம்.
அதிகப்படியான திரை நேரம்
திரையின் முன் அதிக நேரம் செலவிடுவது உங்கள் தோரணையை மாற்றி, உங்கள் கழுத்தையும் கண்களையும் கஷ்டப்படுத்தலாம். திரைகளை அதிகமாகப் பயன்படுத்துவது தலைவலி, மங்கலான பார்வை மற்றும் தூக்க முறைகளில் கூட தொந்தரவுகள் ஏற்படலாம். இதன் விளைவாக உங்கள் கழுத்து மற்றும் கண்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கூடுதலாக, திரைகளை அதிக நேரம் பயன்படுத்தினால், சருமத்தில் கொலாஜன் சப்ளை குறைந்து, சுருக்கங்கள், தொய்வு மற்றும் வயது புள்ளிகள் ஏற்படலாம்.
அதிகப்படியான/ உடற்பயிற்சி இல்லாமை
அதிகப்படியான மற்றும் போதிய உடற்பயிற்சி இல்லாமை இரண்டும் உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. ஆனால் அவை வெவ்வேறு வழிகளில் உடலில் பாதிப்பு ஏற்படுத்துகின்றன. சோம்பேறித்தனமான வாழ்க்கை முறை முதுமைக்கு பங்களிக்கிறது. ஆனால் அதேநேரம் அதிகப்படியான உடற்பயிற்சியும் அதே போன்றதொரு விளைவையே ஏற்படுத்துகிறது. அதிகப்படியான உடற்பயிற்சி, தோல் மற்றும் பிற உடல் திசுக்களுக்கு தீங்கு விளைவிக்கும். அதிகப்படியான உடற்பயிற்சி உடலில் தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்துகிறது