விநாயகர் சதுர்த்தி எதற்காக கொண்டாடப்படுகிறது? வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்
இந்தியாவில், ஆண்டுதோறும், ஆவணி மாதத்தில், அமாவாசை முடிந்து 4-வது நாளில், விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும். இது நாடு முழுவதும் மிகவும் பிரம்மாண்ட விழாவாக கொண்டாப்படுகிறது. இந்த நாளில், புதிதாக விநாயகர் சிலை செய்து வழிபாட்டு, 3 நாட்கள் முதல் ஒரு வாரம் வரை அவற்றிற்கு பூஜைகள் செய்து, பின்னர் அந்த சிலைகளை தண்ணீரில் கரைத்துவிடுவது வழக்கம். விநாயகர் சதுர்த்தி தினம் எப்போது முதல் கொண்டாப்படுகிறது என்ற தகவல் சரியாக தெரியவில்லை என்றாலும், 16ஆம் நூற்றாண்டில், மகாராஷ்டிராவை ஆண்ட சத்திரபதி சிவாஜியின் ஆட்சி காலத்தில் விநாயகர் சதூர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது என வரலாற்று பதிவுகள் கூறுகின்றன.
ஆங்கிலேயர் ஆட்சியில் விநாயகர் சதூர்த்திக்கு தடை
18ஆம் நூற்றாண்டில் புனேவில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா திருவிழாவாக கொண்டாடப்பட்டாலும், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் உள்ளது. 1890களின் பிற்பகுதியில், லோகமான்யா திலக் என்பவர் இந்த பண்டிகைக்கு தடை விதிப்பதை எதிர்த்து போராட்டத்தை தொடங்கியுள்ளார். அதன்பிறகு மும்பை, புனே உள்ளிட்ட பகுதியில் விநாயகர் சதுர்த்தி திருவிழா மீண்டும் களைகட்ட துவங்கியதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கொல்கத்தா, ராஜஸ்தான், கோவா உள்ளிட்ட வட மாநிலங்களிலும், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா தெலுங்கான உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் விநாயகர் சதுர்த்தி பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது.