தினசரி ஊறவைத்த வால்நட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?
இயற்கையின் வரப்பிரசாதங்களில் ஒன்றான இயற்கை உணவுகளில் பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது. குறிப்பாக பழங்களும், நட்ஸ் வகைகளும் உடலுக்கு நன்மைகள் பயக்கும். வளரிளம் பருவத்தில் உள்ள சிறு குழந்தைகளின் ஆரோக்கியம் மிகவும் உணர்திறன் வாய்ந்தது. எனவே அவர்களின் உடலுக்கு ஏற்ற உணவுகளை கொடுப்பது அவசியம் என்று குழந்தைகள் நல மருத்துவர்களும் கூறுகின்றனர். இது குழந்தைகளின் மன வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று கூறுகின்றனர். இதில், வால்நட் பருப்பு மிகவும் நன்மை தரும் என கூறுகிறார்கள். தினசரி இரண்டு வால்நட் பருப்புகளை ஊற வைத்து தருவது பல ஆரோக்கிய நன்மைகள் தருகிறது. அக்ரூட் அல்லது வால்நட் பருப்பில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
வால்நட்டின் நன்மைகள் என்ன?
அதிக சத்துக்கள்: இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், புரதம் மற்றும் நார்ச்சத்து குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மூளையின் சுறுசுறுப்பை அதிகரிக்கும் இதயம் மற்றும் எலும்புகளுக்கு நல்லது இதில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அமிலம் ஞாபக மறதியைப் போக்கி நினைவுத் திறனை அதிகரிக்கச் செய்கிறது. மார்பக புற்றுநோய்: தினமும் ஊறவைத்த வால்நட்ஸை பெண்கள் சாப்பிடுவதால் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். அதோடு வால்நட்ஸ் கணைய புற்றுநோயின் அபாயத்தைத் தடுப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. வயதான தோற்றத்தை தடுக்கும்: வால்நட்ஸ் உடல் வறட்சியைப் போக்கும். நெற்றி மற்றும் சருமத்தில் ஏற்படும் சருமச் சுருக்கத்தைப் போக்கக் கூடிய ஆற்றல் கொண்டது.